இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில்வே நெட்வொர்க் ஆகும். அனைத்து தரப்பு மக்களும் ரயிலில் பயணிக்கின்றனர். ரயில்கள் தொடர்பான பல சுவாரசியமான உண்மைகள் உள்ளன. இது பற்றி பெரும்பாலான மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ரயில்வே தொடர்பான சுவாரஸ்யமான தகவலை இன்று அறிந்து கொள்ளலாம்
ரயில் பெட்டியின் கூரையில் உள்ள வட்ட வடிவ மூடியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், ரயில் பெட்டியில் இந்த வட்ட வடிவ வடிவமைப்பு ஏன் பொருத்தப்பட்டுள்ளது; அதன் வேலை என்ன என்பது நம்மில் பலருக்கு தெரியாது.
ரயில்வேயில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, ரயில் பெட்டிகளின் கூரையில் நிறுவப்பட்ட இந்த தட்டுகள், வட்ட வடிவ கூரை வென்டிலேட்டர்கள் என்று அழைக்கப்படுகின்றன, ரயில் பெட்டியில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது, ஈரப்பதம் (வெப்பம்) மிகவும் அதிகமாக இருக்கும். இதனால், வெப்பத்தை குறைக்க, வெண்டிலேட்டரை போல் செயல்படும் வகையில் ரயிலின் பெட்டியில் இவை பொருத்தப்பட்டுள்ளன.
இது தவிர, ரயிலின் உள்ளே கூரை பகுதியில் துளைகள் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இதன் மூலம் சூடான காற்று வெளியேறுகிறது. சூடான காற்று எப்போதும் மேல்நோக்கி செல்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. துளைகளுக்கு மேலே உள்ளே இருக்கு மூடிகள் வெண்டிலேட்டராக செயல்படுகிறது.
ரயிலின் மேற்கூரையில் வட்டத் தகடுகள் பொருத்தப்பட்டிருப்பதற்கான மற்றொரு காரணமாக, இதனால் மழை பெய்யும் போது, மழை நீர் ரயிலுக்குள் வருவதை தடுப்பதும் ஆகும்.