Diabetes Control Tips: உடல் உழைப்பே இல்லாத வாழ்க்கை முறை நமக்கு கொடுத்த பரிசுகளில் ஒன்று, சர்க்கரை நோய் என்னும் நீரழிவு. சர்க்கரை நோய்க்கு பல மருத்துவ சிகிச்சைகள் இருந்தாலும், அதை கட்டுக்குள் வைத்திருக்க, உணவு முறையும் சில வீட்டு வைத்தியங்களும் பெரிதும் கை கொடுக்கும்.
உலகம் முழுவதுமே நீரழிவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் வயதானவர்களை மட்டுமே அட்டாக் செய்து வந்த இந்த சர்க்கரை வியாதி, குழந்தைகள் முதியவர்கள் என பாரபட்சமில்லாமல் அனைவரையும் பாதிக்க ஆரம்பித்துள்ளது.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த, உணவு முறையில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். கூடவே சில பாட்டி வைத்தியங்களையும் கடைப்பிடித்து வந்தால், நோயற்ற வாழ்வை வாழலாம். அந்த வகையில், ஆயுர்வேதத்தில் காலமாக சர்க்கரை நோயை கட்டுப்படுத்த நித்திய கல்யாணி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நித்திய கல்யாணி, ஒரு அற்புதமான மூலிகை. மூலிகை வைத்தியம் மட்டுமல்லாது, நவீன மருத்துவத்திலும் முக்கியத்துவம் கொண்டுள்ள மூலிகைகளில் நித்திய கல்யாணி என்று அழைக்கப்படும் சதாபஹார், கணைய செல்களில், இன்சுலின் உற்பத்தியை தூண்டி சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.
நித்திய கல்யாணியின் பூக்கள் மட்டுமல்லாது இலைகளையும், சுகர் லெவலை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம். இவை இரண்டுமே கணையத்தில் இருக்கும் பீட்டா செல்களை தூண்டி, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது.
நித்திய கல்யாணி, சரியான முறையில் உட்கொள்வதன் மூலம், சர்க்கரை நோய் மட்டுமின்றி, உயர் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும். அதோடு மட்டுமல்லாமல் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். சுவாசம் தொடர்பான நோய்களிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.
நித்திய கல்யாணி பூக்களை, மென்று சாப்பிடுவதன் மூலம், ரத்த சர்க்கரை அளவு சிறப்பாக கட்டுப்படும். பூவாக சாப்பிட அபிடிக்காதவர்கள், நீங்கள் தயாரிக்கும் ஏதேனும் காய்கறி ஜூஸில் பூக்களையும் சேர்த்து தயாரித்து, காலையில் வெறும் வயிற்றில் ஜூஸ் ஆகவும் தயாரித்து குடிக்கலாம்.
நித்தியகல்யாணி செடியின் இலைகளை, பறித்து சுத்தம் செய்து, அதனை நன்றாக உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு, சுத்தமான காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்து பயன்படுத்தலாம். வெதுவெதுப்பான நீரில், ஒரு டீஸ்பூன் நித்திய கல்யாணி பொடியை கலந்து வெறும் வயிற்றில் அருந்துவதன் மூலம், சுகர் லெவலை வியக்கத்தக்க வகையில் கட்டுப்படுத்தலாம்.
நித்திய கல்யாணி பூவிலிருந்து தயாரிக்கப்படும் மூலிகை டீ உட்கொள்வதும் நன்மை பயக்கும். நித்திய கல்யாணி டி தயாரிக்க, தண்ணீரை கொதிக்க வைத்து, சிறிது நித்திய கல்யாணி பூக்கள் அல்லது இலைகளை சேர்த்து, சிறிது நேரம் வைத்து, சூடு ஆறிய பின் வடிகட்டி அருந்தலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.