அடேங்கப்பா... கேஎல் ராகுல் இத்தனை நடிகைகளுடன் காதல் உறவில் இருந்தாரா?

பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், நடிகை அதியா ஷெட்டியை திருமணம் செய்துகொள்வதற்கு முன்னர் சில இந்திய நடிகைகளுடன் காதல் உறவில் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டார்.

 

1 /5

பஞ்சாப் திரையுலகின் பிரபலமான நடிகையான சோனம் பஜ்வா, பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுடன் உறவில் இருந்த செய்தி தீயாக பரவியது.  சமூக வலைதளங்களில் இவர்கள் பரிமாறிக்கொண்ட கமெண்டுகளை வைத்து இவர்கள் காதல் உறவில் இருக்கும் செய்தி பரவியது.  

2 /5

'வெட்டிங் புள்ளவ்' மற்றும் 'பட்டி குல் மீட்டர் சாலு' போன்ற படங்களின் மூலம் பிரபலமான அகன்ஷா ரஞ்சன் கபூர், ராகுலுடன் உறவில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.  இந்த ஜோடி தங்கள் உறவை ரகசியமாக வைத்திருந்தது, பின்னர் இவர்களது உறவில் முறிவு ஏற்பட்டது.  

3 /5

2008-ல் வெளியான 'ஜன்னத்' படத்தின் மூலம் பிரபலமான நடிகை சோனம் சவுஹான் நிஜ வாழ்க்கையிலும் கிரிக்கெட் வீரரை விரும்பியுள்ளார்.  '@klrahul11 விளையாடுவதை பார்த்ததில் மகிழ்ச்சி, அவர் மிகவும் திறமையானவர்' என்று ராகுலுக்காக அவர் ட்வீட் செய்திருந்தார்.  நீண்ட நாட்களாக ராகுல்-சோனம் குறித்து கிசுகிசுக்கப்பட்டது.  

4 /5

தமிழில் 'ஈஸ்வரன்' படத்தின் மூலம் பிரபலமாக அறியப்பட்ட நடிகை நிதி அகர்வால், ராகுலுடன் உறவில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.  'முன்னா மைக்கேல்' படம் வெளியான பிறகு நிதி அகர்வால் தான் சிங்கிள் இல்லை என்று கூறியதால் இவரை பற்றி பல வதந்திகள் பரவியது.  அதன் பின்னர் தானும், நிதியும் நல்ல நண்பர்கள் என்று ராகுல் தெரிவித்தார்.  

5 /5

பல ஆண்டுகளாக ரகசியமாக டேட்டிங் செய்து வந்த ராகுல்-அதியா ஷெட்டி ஜோடி சமீபத்தில் தான் அனைவருக்கும் தெரியும்படியாக தங்கள் உறவை வெளிப்படுத்தி திருமணம் செய்துகொண்டனர்.