தளபதி 69 படத்தின் இயக்குனர் இவரா? வெளியானது அப்டேட்!

Thalapathy 69 Update: விஜய் அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  மார்ச் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டம்.

 

1 /5

தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'The Greatest Of All Time' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.  

2 /5

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், 'தளபதி 69' படம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.    

3 /5

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  கார்த்திக் சுப்பராஜ் சமீபத்தில் ஜிகர்தண்டா 2 படத்தை இயக்கி இருந்தார்.  

4 /5

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும், சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என்று கூறப்படுகிறது.    

5 /5

கடைசியாக 2017 ஆம் ஆண்டு வெளியான ‘பைரவா’ படத்தில் சந்தோஷ் நாராயணன் விஜய் படத்திற்கு இசை அமைத்து இருந்தார். The Greatest Of All Time படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரில் முடிய உள்ளது.