John Wick 4: ஓடிடியில் வெளியாகிறது ஜான் விக் 4..எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?

 கியானு ரீவ்ஸ் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான ஜான் விக் சேப்டர் 4 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

John Wick 4 OTT Release: கியானு ரீவ்ஸ் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான ஜான் விக் சேப்டர் 4 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

1 /8

கியானு ரீவ்ஸ் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான படம் ஜான் விக் சேப்டர் 4. 

2 /8

ஆக்‌ஷன் த்ரில்லராக உருவான இப்படத்தின் முதல் பாகம் 2014ஆம் ஆண்டில் வெளியானது. 

3 /8

கொலைகாரனாக இருந்த ஜான் விக் திருந்தி வாழ்வதும், அவனது கடந்த காலம் அவனை விடாமல் துரத்துவதும் அதனிடமிருந்து அவன் தப்பிப்பதும்தான் படத்தின் கதை. 

4 /8

மனைவி இறந்த பிறகு துணையாக இருந்த நாயை கொண்றவர்களை தேடித்தேடி கொல்லுவதில் இருந்துதான் ஜான் விக்கின் கதையே ஆரம்பிக்கும். 

5 /8

இரத்தம், கொலை, முழுக்க முழுக்க சண்டை காட்சிகள் நிறைந்த இந்த படத்திற்கு உலகம்  முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 

6 /8

கியானு ரீவ்ஸ் பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் ஜான் விக் படம்தான் அவரை புகழின் உச்சிக்கு எடுத்து சென்றது. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

7 /8

இம்மாதம் 23 அன்று ஜான் விக் படம் லயன்ஸ்கேட் ப்ளே என்ற தளத்தில் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

8 /8

லயன்ஸ் கேட் தளத்தில் வெளியாகியுள்ள ஜான் விக் படத்தை வெகுசில பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமே பார்க்க முடியுமாம். இந்தியாவில் இன்னும் இப்படம் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் மூன்று பாகங்கள் அமேசான் ப்ரைமில் இருக்கிறது,