Memorial: ஜாலியன் வாலாபாக் நினைவுச்சின்னத்தின் புதுப்பிக்கப்பட்ட வளாகம்

ஜாலியன் வாலாபாக் நினைவுச்சின்னத்தின் புதுப்பிக்கப்பட்ட வளாகத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். வெளியிட்டார்.

1919, ஏப்ரல் 13ஆம் நாளன்று பிரிட்டிஷ் படைகள் ஜாலியன்வாலாபாகில் கூடியிருந்த அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த கொடூர துப்பாக்கிச்சூட்டில் 1,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

READ ALSO | Pkl 2021: புரோ கபடி லீக் சீசன் 8: அதிக விலைக்கு ஏலம் போன வீரர்கள்

1 /6

ஜாலியன்வாலாபாகிற்கு செல்லும் குறுகிய சந்து இதுவரை சரி செய்யப்படவில்லை. தற்போதைய அரசு எடுத்த சீரமைப்பு முயற்சியின் கீழ், படுகொலை சம்பவம் நடைபெற்ற சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு பழுது பார்க்கப்பட்டது. மறுசீரமைப்பிற்குப் பிறகு படுகொலையின் வரலாற்றைக் கூறும் புதிய சுவரோவியங்கள் இங்கு உயிர் பெற்றுள்ளன. (புகைப்படம்: ட்விட்டர்)

2 /6

அந்த காலகட்டத்தில் பஞ்சாபில் நிகழ்ந்த நிகழ்வுகளின் வரலாற்று நிகழ்வுகளை காட்சிப்படுத்தியுள்ளனர். ஆடியோ-காட்சி தொழில்நுட்பம், ப்ரொஜெக்ஷன் மேப்பிங் மற்றும் 3 டி பிரதிநிதித்துவம், கலை மற்றும் சிற்ப நிறுவல்கள் உட்பட பல நவீன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. (புகைப்படம்: ட்விட்டர்)

3 /6

தேவையற்ற மற்றும் பயன்படுத்தப்படாத கட்டிடங்களை மாற்றியமைத்து 4 அருங்காட்சியக உருவாக்கப்பட்டுள்ளன. (புகைப்படம்: ட்விட்டர்)

4 /6

தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அங்கிருந்த கிணற்றில் குதித்ததில் ஏராளமான மக்கள் இறந்தனர். தியாகிகள் கிணறு என்று அழைக்கப்படும் அங்கு, இன்னமும் இருக்கிறது    (புகைப்படம்: ட்விட்டர்)

5 /6

ஜாலியன் வாலாபாக் படுகொலை இந்தியாவின் சுதந்திரத்திற்கு முந்தைய இயக்கத்தின் ஒரு முக்கிய தருணம். (புகைப்படம்: ட்விட்டர்)

6 /6

பிரிட்டிஷ் பேரரசின் கீழ் இருந்தபோது, பிரிட்டீஷாரின் களங்கம் என்று கூறப்படும் இநத இடத்தை துணி சந்தையாக மாற்ற முயற்சிக்கப்பட்டது. ஜாலியன் வாலாபாக் கொடூரத்தின் சான்றுகளை அழிக்க ஆங்கிலேயர்கள் விரும்பினர். ஆனால் அந்த தந்திரம் பலிக்கவில்லை என்பது பலருக்குத் தெரியாத உண்மை. (புகைப்படம்: ட்விட்டர்)