சனி பெயர்ச்சி 2023: தை மாதம் முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்

சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். 2023ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி நிகழப்போகிறது. அதன்படி பொங்கல் முடிந்த பிறகு திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சி நிகழ்கிறது. அதேபோல் வாங்கிய பஞ்சாங்கப்படியும் மார்ச் 29ஆம் தேதி சனி பெயர்ச்சி நிகழ உள்ளது. இந்த சனி பெயர்ச்சி காலத்தில் சனி பகவான் சில ராசிக்காரர்களுக்கு மிக பிரம்மாண்ட ராஜ யோகத்தை தரப்போகிறார். யார் அந்த அதிர்ஷ்டசாலிகள் என்று பார்க்கலாம்.

1 /4

மேஷ ராசி: சனி பகவானின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கப்போகிறது. முதலீடுகள் எல்லாம் இரட்டிப்பு லாபத்தை தரப்போகிறார். பணம் தேடி வரும். இடம் வாங்குவீர்கள். வீடு வாங்குவீர்கள். பிரபலமானவராக மாறப்போகிறீர்கள். உங்களுக்கு பழைய கடன் அடையும். வீடு கட்டுவதற்கும் நிலம் வாங்குவதற்கும் எதிர்பார்த்த கடன் வந்து சேரும். பலருக்கும் உதவி செய்யும் அளவிற்கு பணம் தேடி வரும்.

2 /4

மிதுன ராசி: பொருளாதாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். மன உளைச்சல் நீங்கி மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். ஆன்மீக பயணம் செல்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியம் அதிகரிக்கும். கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது.

3 /4

கன்னி ராசி: உங்களுக்கு இருந்த பணப்பிரச்சினைகள் நீங்கும். தடைபட்டிருந்த காரியங்கள் படிப்படியாக நீங்குவதற்கான அறிகுறிகள் இப்போதே உங்களுக்கு தென்படும். நீங்கள் மிகப்பெரிய யோகாதிபதியாக மாறப்போகிறீர்கள்.

4 /4

தனுசு ராசி: சனிபகவான் செல்வதால் யோகமும் ஞானமும் தேடி வரப்போகிறது. நமக்கு விடிவு காலம் எப்போது என்று காத்திருந்த தனுசு ராசிக்காரர்களுக்கு விடியல் பிறக்கப்போகிறது. நினைத்தது நிறைவேறப்போகிறது. திருமண யோகம் கைகூடி வரப்போகிறது. நிறைய வருமானமும் கிடைக்கப்போகிறது.