சமூக வலைத்தளங்கள் வளர்ந்துள்ள காலகட்டத்தில் முன்னாள் காதலியுடன் நட்பில் இருக்க பலர் விரும்புகின்றனர். இது நல்லதா? இல்லை கெட்டதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அனைவருக்கும் சிறு வயதில் பள்ளி, கல்லூரி நாட்களில் ஒரு காதல் இருந்து இருக்கும். வெகு சிலர் மட்டுமே அந்த உறவை திருமணம் வரை கொண்டு செல்கின்றனர். பெரும்பாலோனோர் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் பிரேக்கப் செய்து கொள்கின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், திருமணத்திற்கு பிறகும் முன்னாள் காதலன் அல்லது காதலியுடன் நட்பில் இருப்பது சரியா தவறா என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். முன்னாள் காதலர்கள் உடன் பகையை வளர்ப்பதை விட நட்பாய் இருப்பது நல்லது தான் என்று உளவியல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நீங்கள் உங்கள் முன்னாள் காதலருடன் நட்பாக இருக்க விரும்பினால் சில அடிப்படை விதிகளை பின்பற்ற வேண்டும். உங்களின் பழைய மற்றும் புதிய உணவுகளை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும்.
உங்கள் முன்னாள் காதலன்/காதலியை தனிப்பட்ட முறையில் அடிக்கடி சந்திப்பதை தவிர்த்து கொள்ளுங்கள். இது உங்களது தற்போதைய உறவில் விரிசலை ஏற்படுத்தலாம்.
முன்னாள் காதலுடன் ஆரோக்கியமான நட்பைப் உருவாக்க இருவரும் தங்களது புதிய உறவுகளைப் பற்றி விவாதிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இருவரும் ஏன் பிரிந்தீர்கள் என்பதை பற்றி பேச வேண்டாம். இது இருவருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தி நட்பாய் இருப்பதில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.