ஒயின் குடிப்பதால் உடலில் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
மது அருந்துவது உடலை ஹைட்ரேட்டாக வைக்க உதவும் என்று பலரும் நம்புகின்றனர், ஆனால் ஒயின் குடித்த அதிக நீரிழப்பு ஏற்படும். ஆல்கஹால் ஒரு டையூரிடிக் என்பதால் இதனை அளவுக்கதிகமாக குடித்தால் உடலில் அதிக நீரிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
அதிகப்படியான மது குடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றாலும், மிதமான அளவு ஒயின் குடிப்பது குடலுக்கு நன்மையை அளிப்பதாக கூறப்படுகிறது. இது உங்களுடைய 40 வயதில் மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது, சிவப்பு ஒயின் குடலுக்கு அதிக நன்மையை அளிக்கிறது.
சிவப்பு ஒயினில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் உடலை பாதிப்படைய செய்யும் செல்களை நடுநிலையாக்க உதவுகிறது. மேலும் இது உடலை சீராக்குவதோடு, சிறந்த டயட்டுக்கும் பயன்படுகிறது.
மேலும் ஒயின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது, மேலும் ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி மற்றும் கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.