IPL2023: ’தோனி முதல் அமித் மிஸ்ரா வரை’ இந்த ஐபிஎல் தொடருடன் ஓய்வுபெறப்போகும் 5 வீரர்கள்

இந்த ஐபிஎல் தொடருடன் அமித் மிஸ்ரா, தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட 5 வீரர்கள் முழுமையாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

1 /5

அம்பத்தி ராயுடு: சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் அம்பத்தி ராயுடுவுக்கு இப்போது 37 வயதாகிறது. அதனால் ஏறக்குறைய இதுவே அவருடைய கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும். பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை ஒவ்வொரு சீசனிலும் வெளிப்படுத்தும் ராயுடு, இந்த சீசனிலும் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். 

2 /5

தோனி: மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் தோனி தலைமையில் சிஎஸ்கே அணி களம் காண்கிறது. அநேகமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி தலைமை தாங்கும் கடைசி தொடர் இதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வயது உள்ளிட்ட காரணங்களால் அவர் முழுமையாக கிரிக்கெட்டில் இருந்து விடை பெற திட்டமிட்டிருக்கிறார் தோனி.

3 /5

தினேஷ் கார்த்திக்: தினேஷ் கார்த்திக் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால் இந்திய 20 ஓவர் அணியில் இடம்பிடித்தார். ஆனால், 20 ஓவர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி வெறியேறியதால் அத்துடன் அவரின் இந்திய அணியுடனான சர்வதேச கிரிக்கெட் பயணமும் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த ஐபிஎல் தொடருடன் முழுமையாக கிரிக்கெட்டுக்கு விடை கொடுக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

4 /5

டேவிட் வார்னர்: ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரரான டேவிட் வார்னர் ஃபார்மில் இல்லை. ரன்கள் எடுக்க தடுமாறி அவர், இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே ஆஸ்திரேலிய அணியின் உலக கோப்பைக்கான அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. மிகச்சிறந்த வீரர் என்றாலும் பார்ம் அவுட் காரணமாக ஓய்வு முடிவை அறிவிக்க வாய்ப்புகள் இருக்கிறது என கிரிக்கெட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. 

5 /5

அமித் மிஸ்ரா: ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியில் இடம்பிடித்திருக்கும் அமித் மிஸ்ராவுக்கு இப்போது 40 வயதாகிறது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடுகிறார். அவர் சிறப்பாக பந்துவீசினாலும், வயது உள்ளிட்ட காரணங்களை வைத்து பார்க்கும்போது அடுத்த ஐபிஎல் விளையாடுவது கடினம். அதனால் இந்த ஐபிஎல் தொடருக்குள் மிஸ்ரா தன்னுடைய ஓய்வு முடிவை அறிவிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.