Internet Banking: ஒரே தவறு மொத்த கணக்கையும் காலியாக்கலாம், இந்த டிப்ஸ் உதவும்

Internet Banking safety tips: இணைய வங்கி வசதி உங்கள் வங்கி தொடர்பான பல பணிகளை எளிதாக்குகிறது. நீங்கள் வீட்டில் இருந்தபடியே பல பணிகளை செய்ய முடிகின்றது. ஆனால் நீங்கள் இணைய வங்கிச் சேவையை (நெட் பேங்கிங்) சரியாகப் பயன்படுத்துகிறீர்களா? இதில் செய்யும் சிறிய தவறும் உங்கள் மொத்த பணத்தையும் காலி செய்துவிடும். ஹேக்கர்கள் அல்லது பிற மோசடிக்காரர்கள் உங்களை சிக்கலில் சிக்க வைக்கலாம். எச்டிஎஃப்சி வங்கி உங்கள் நெட் பேங்கிங்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி கூறியுள்ளது. அவற்றை பற்றி இங்கே காணலாம். 

1 /8

உங்கள் நுகர்வோர் ஐடி மற்றும் IPIN ஐ தனிப்பட்டதாக வைத்திருங்கள். வங்கி ஊழியர்கள் உட்பட யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பிரவுசரின் அட்ரஸ் பாரில் வங்கியின் இணையதள முகவரியைத் டைப் செய்து, வங்கியின் முகப்புப் பக்கத்தின் மூலம் மட்டுமே எப்போதும் நெட் பேங்கிங் தளத்தைப் பார்வையிடவும். உங்கள் பிரவுசரில் Auto Complete அம்சத்தை முடக்கவும்.  

2 /8

உங்கள் இணைய வங்கிக் கணக்கில் உள்நுழையும்போது வர்சுவல் கீபோர்ட் வசதியைப் பயன்படுத்த HDFC வங்கி அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் தனிப்பட்ட கணக்கு விவரங்களை எப்போதும் தட்டச்சு செய்யவும், அதை காபி பேஸ்ட் செய்ய வேண்டாம்.

3 /8

உங்கள் பரிவர்த்தனைகளை தவறாமல் கண்காணிக்கவும். ஏதேனும் மோசடியான பரிவர்த்தனை குறித்த சந்தேகம் இருந்தால், வங்கியிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும். நெட்பேங்கிங்கிலிருந்து வெளியேறும்போது எப்போதும் லாக் அவுட் செய்யவும். பிரவுசரை நேரடியாக மூட வேண்டாம்.

4 /8

உங்கள் நெட்பேங்கிங் கணக்கில் லாக் இன் செய்து, உங்கள் IPIN ஐப் பெற்றவுடன் அதை மாற்றவும். உங்கள் IPIN ஐ நினைவில் கொள்ளுங்கள். அதை எங்கும் எழுதி வைக்க வேண்டாம். உங்கள் IPIN ஐ தவறாமல் மாற்றவும். உங்கள் கணினியில் சமீபத்திய ஃபயர்வால் மற்றும் வைரஸ் தடுப்பு மென்பொருள் நிறுவப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.

5 /8

வங்கியின் இணையதளத்தில், சட்டப்பூர்வ SSL பாதுகாப்புச் சான்றிதழை (https) சரிபார்க்கவும். HTTP உடன் இணைக்கப்பட்ட "s" பாதுகாப்பான இணையதளத்தைக் குறிக்கிறது.  

6 /8

சைபர் கஃபேக்கள் அல்லது ஹோட்டல்கள் அல்லது விமான நிலையங்கள் போன்ற பொது வைஃபை நெட்வொர்க்குகள் போன்ற கணினி நெட்வொர்க்குகள் மூலம் இணைய வங்கியை வசதியை அணுக வேண்டாம். வங்கியின் இணையதளத்தைத் தவிர மின்னஞ்சல்கள் அல்லது தளங்களுக்கான இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம்.

7 /8

இன்டர்நெட் பேங்கிங் பாஸ்வேர்டை எங்கும் எழுத வேண்டாம். மேலும் உங்கள் கம்ப்யூட்டரை தெரியாத சோர்ஸ்களுடன் பகிர வேண்டாம். உங்கள் கடவுச்சொல், OTP, டெபிட் கார்டு எண் மற்றும் CVV ஆகியவற்றை யாருக்கும் தெரிவிக்காதீர்கள். வங்கி ஊழியர்களிடமும் தெரிவிக்காதீர்கள்.

8 /8

உங்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைக் கோரும் மின்னஞ்சலைப் பெற்றால், தவறுதலாகவும் பதிலளிக்க வேண்டாம். உங்கள் பிறந்த தேதி, மனைவியின் பெயர் போன்ற யூகிக்க எளிதான கடவுச்சொற்களைத் தேர்வு செய்ய வேண்டாம். மின்னஞ்சலில் ஏதேனும் இணைப்புகள் இருந்தாலும் அது நம்பகமான சோர்சிலிருந்து இல்லை என்றால் ஒருபோதும் பதிவிறக்க வேண்டாம்.