டயர்களில் காணப்படும் சிறிய ரப்பர் முடிகள்... சில சுவாரஸ்ய தகவல்கள்...!

டயரில் ரப்பர் முடிகள்: டயரில் சிறிய ரப்பர் முடிகளை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? டயர்களில் சிறிய ரப்பர் முடிகள் ஏன் உள்ளன, அவற்றினால் பயன் ஏதும் உள்ளதா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அவற்றைப் பற்றி அறிந்து கொள்வோம்.

 

1 /5

டயரில் உள்ள ரப்பரின் முடிகள் "வென்ட் ஸ்பியூஸ்" என்று அழைக்கப்படுகின்றன. இந்த முட்கள் போன்ற வடிவத்திற்கு 'வெண்ட் ஸ்பியூஸ்' (Vent Spews) என்று பெயர். 'ஸ்பியூ ஹோல்ஸ்' (Spew Holes) என்ற பெயரிலும் கூட அவை அழைக்கப்படுகின்றன. இது டயர் உற்பத்தி பணிகளில் உருவாகும் துணை பொருள் (By-product) ஆகும்.  

2 /5

டயரில் வென்ட் ஸ்பிகோட்கள் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சிறிது நேரம் டயரைப் பயன்படுத்திய பிறகு, அது தானாகவே அகற்றப்படும். அவற்றால் எந்தப் பயனும் இல்லை என்றால் ஏன் டயரில் இருக்கிறது என்ற எண்ணம் தோன்றலாம்.

3 /5

ஒரு சிலர் இந்த 'வெண்ட் ஸ்பியூஸ்' மூலம் டயர் புதியதா? என்பதை கண்டறியலாம் என்கின்றனர். இன்னும் ஒரு சிலரோ இது சத்தத்தை குறைப்பதற்கு பயன்படுகிறது என கூறுகின்றனர்.

4 /5

டயரை தயாரிக்கும் போது, சூடான காற்றழுத்தம் 'அப்ளை' செய்யப்படுவதால் உருவாகும் காற்று குழிழ்கள், காற்றோட்ட துளைகள் வாயிலாக வெளியேறி விடும். இது நடக்கும்போது, திரவ நிலையில் உள்ள சூடான ரப்பரும், காற்றோட்ட துளைகள் வாயிலாக சிறிய அளவில் வெளியே வந்து விடும். இவைதான் புதிய டயர்களில் நாம் காணும் முடிகள் அல்லது முட்கள் போன்ற அமைப்பு.

5 /5

டயர்களில் இருக்கும் இந்த முடிகள் அல்லது முட்கள் போன்ற அமைப்புகளால் நமக்கு உண்மையில் எந்தவிதமான பலனும் இல்லை. இது தேவையில்லாத ஆணி என கூறப்படுகிறது.