பெங்களுரில் நடைபெற்ற 5வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 160 ரன்கள் எடுத்தது.
இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5வது 20 ஓவர் போட்டி பெங்களுரில் நடைபெற்றது. இதில் டாஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூவேட் பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்த தொடரில் மட்டும் அவர் நான்காவது முறையாக டாஸ் வெற்றி பெற்று பவுலிங் தேர்வு செய்திருக்கிறார்.
இதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் 37 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். அவர் களத்தில் இருந்ததாலேயே இந்திய அணி கவுரமான ஸ்கோர் எடுக்க முடிந்தது.
ஒரு கட்டத்தில் இந்திய அணி 55 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் 6 ரன்களுக்கு அவுட்டானார்.
பின்வரிசையில் இறங்கிய ஜிதேஷ் சர்மா 24 ரன்களும், அக்சர் படேல் 31 ரன்களும் எடுத்தனர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரியளவில் யாரும் ஜொலிக்கவில்லை.
எதிர்பார்த்த அளவுக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடியிருந்தால் 200 ரன்கள் அடித்திருக்கலாம். ஆனால் பிட்ச் ஸ்லோவாக இருப்பதாக கமெண்டரியில் இருந்த முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர்.
சிறப்பாக பந்துவீசி இந்திய அணியை 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய ஆஸ்திரேலிய அணி சேஸிங் இறங்கியது.