இந்திய சுதந்திர தினம் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படுவது வழக்கம். உலகம் முழுவதிலுமே தேசியக் கொடிகளுக்கு என்று சில மரியாதைகள் உண்டு.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் அன்று தேசியக்கொடி ஏற்றப்படுகிறது. ஆனால் அனைவருக்கும் தெரியுமா தேசியக்கொடி ஏற்றப்பட்டு போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் என்ன என்று எத்தனை பேருக்கு தெரியும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ளவேண்டும். தேசியக்கொடிக்கென சில விதிகளை அரசு சட்டம் ஆக்கி உள்ளது.
இந்திய சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகள் ஆகிவிட்டன. பிரிட்டிஷ் அரசிடம் இருந்து சுதந்திரம் வாங்கிய இந்த 71 ஆண்டுகளில் நாட்டில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்ப்பட்டு உள்ளனர். தற்போது பொதுமக்கள் வீடு, அலுவலகம் மற்றும் கார் போன்ற இடங்களில் தேசியக்கொடியை வைக்க அனுமதி கிடைத்துள்ளது. ஆனால் இன்னும் பெரும்பாலான மக்களுக்கு தேசியக்கொடி விதிகள் தெரியாது.
சுதந்திர தின விழாவிற்கு முன்னதாக, இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் தங்கள் படங்களை தேசியக்கொடியுடன் சமூக ஊடகங்களில் போடுகிறார்கள். ஆனால் சமூக ஊடகங்களில் இப்படி போடுவது சட்டத்தில் அனுமதி இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. 2002 ஆம் ஆண்டு "இந்திய தேசியக் கொடி சட்டம்" கீழ், இந்தியாவின் அனைத்து மக்களும் மூவர்ணக்கொடியை ஆண்டு முழுவதும் பயன்படுத்திக்கொள்ள உரிமை கிடைத்தது.
2005ல் இச்சட்டம் திருத்தப்பட்டு இந்திய தேசியக்கொடி இடுப்பிற்கு கீழ் அணியக்கூடாது போன்ற சில விதிகள் எழுதப்பட்டு மேம்படுத்தப்பட்டது. இதில் கொடியை கால்சட்டையாக அணிவதற்கு தடை விதித்தது.
தேசியக்கொடியைக் கையால் நெய்த காதி துணியில் செய்ய வேண்டும். தேசியக் கொடியின் வெளிப்படுத்துதல், கையாள்தல் முறைகள், இந்திய கொடிச் சட்டத்தால் ஆளப்படுகிறது.
எக்காள ஒலியுடன் கொடியை ஏற்றும் போது விரைவாக ஏற்ற வேண்டும். கீழே இறக்கும் போது சற்று மெதுவாகவும், அலங்காரமாகவும் இறக்க வேண்டும். பழுதடைந்த அல்லது கசங்கிய கொடியை பறக்க விடக்கூடாது.
சிலை அல்லது நினைவுச் சின்னத்தை மூடுவதற்குத் தேசியக்கொடியைப் பயன்படுத்தக் கூடாது. கார்களில் கொடிகளைப் பறக்க விட விரும்பினால் நிலையாகப் பொருத்தப்பட்ட கம்பியில்தான் பறக்கவிட வேண்டும்.
தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலம் செல்லும் போது, வலப்பக்கமாக ஏந்திச் செல்லவேண்டும். மேலும் நிறைய மற்ற கொடிகள் இருந்தால், அனைத்து கொடிக்கும் முன்பு நமது தேசியக் கொடி இருக்கவேண்டும்.
இந்திய நாட்டின் 72-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15, 2018 நாள் கொண்டாடப்படுகிறது. நமது தேசியக்கொடி காவி, வெள்ளை, பச்சை என மூவர்ணங்களை கொண்டது. மூவர்ணக்கொடியின் நடுவில், கடற்படை நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரம் என கூறப்படும் 24 கோல்களை கொண்ட சக்கரம் உண்டு. இந்திய தேசியக்கொடியை வடிவமைத்தவர் பிங்காலி வெங்கையா என்ற விவசாயி ஆவார்