IND vs BAN: டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் மற்றும் ரோஹித்தின் தெறிக்கிவிடும் சாதனைகள்!

IND vs BAN in Tests: இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் உள்ள MA சிதம்பரம் மைதானத்தில் செப்டம்பர் 19 நடைபெற உள்ளது.

 

1 /6

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய வீரர்கள் சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.   

2 /6

இந்நிலையில் பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன், இந்த அணிக்கு எதிரான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் டெஸ்ட் ரெக்கார்டுகளை பற்றி பார்ப்போம்.   

3 /6

விராட் கோலியின் சாதனை வங்கதேசத்துக்கு எதிராக விராட் கோலி சிறப்பான சாதனை வைத்துள்ளார். 6 டெஸ்ட் போட்டிகளில் 54.63 சராசரியில் 437 ரன்கள் அடித்துள்ளார். இதில் 204 ரன்கள் உட்பட 2 சதங்களை அடித்துள்ளார்.  

4 /6

ரோஹித் சர்மாவின் சாதனை வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா 3 டெஸ்ட் போட்டிகளில் 11 சராசரியில் 33 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதில் அதிகபட்ச ஸ்கோர் 21 ரன்கள் தான்.  

5 /6

இந்தியா vs பங்களாதேஷ் டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் இந்தியா vs பங்களாதேஷ் அணிகள் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் இந்தியா 11ல் வெற்றி பெற்று, 2 டிராவில் முடிந்தது. இந்தியாவை பங்களாதேஷ் அணி டெஸ்ட் வென்றதில்லை.  

6 /6

வலுவாக இருக்கும் வங்கதேசம் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு சென்று அங்கு அவர்களை 2-0 என்ற கணக்கில் க்ளீன் ஸ்வீப் செய்து வெற்றி பெற்றுள்ளது வங்கதேச அணி. இதனால் இந்தியா மற்றும் பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது.