யூரிக் அமில பிரச்சனையா... ‘இந்த’ உலர் பழங்கள் நிவாரணத்தை கொடுக்கும்!

தற்போது பெரும்பாலானோருக்கு யூரிக் அமில பிரச்சனை உள்ளது. உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் மூட்டு வலி, நிற்பதில் சிரமம், விரல்களில் வீக்கம், மூட்டுகளில் வீக்கம் மற்றும் கால் மற்றும் விரல்களில் கூச்ச உணர்வு, சோர்வு ஆகியவை ஏற்படுகின்றன. யூரிக் அமில அளவு அதிகரிப்பது பல நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. இந்த நோய்களில் முக்கியமாக கீல்வாதம், இதய நோய், சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் அடங்கும்.

1 /5

முந்திரியில் போதுமான அளவு பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி உள்ளது. இது யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதனால தினமும் 3 முந்திரி சாப்பிடலாம். அதற்கு மேல் எடுத்துக் கொள்வது நல்லதல்ல

2 /5

வாதுமை  பருப்புகள் ஒரு சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை அனைத்தும் உடலில் இருந்து யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவுகிறது.

3 /5

பாதாம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதே நேரத்தில், மூளையை கூர்மைப்படுத்துவதோடு, யூரிக் அமில அளவைக் குறைப்பதிலும் காணப்படுகிறது.  

4 /5

ஏசல்நட்ஸ்களில் போதுமான அளவு செலினியம் உள்ளது, இது யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது, எனவே நீங்கள் அதை உட்கொள்ளலாம்.

5 /5

ஆளி விதைகளில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. நீங்கள் ஆளி விதைகளை உட்கொண்டால், யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தலாம். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)