Domestic Violence: விவாரகரத்து பெறுவதற்காக என் மனைவி பிறப்புறுப்பை வெட்டி விட்டார் என்று புதிதாய் திருமணம் செய்துக் கொண்ட கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். கணவரால் உடல் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதை நிரூபித்தால் விவாகரத்து கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் நடைபெற்ற பிறப்புறுப்பு தாக்குதல் சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கணவன் ஆண்மையற்றவன் என்பதை நிரூபிப்பதற்காக.கணவரின் பிறப்புறுப்பை வெட்டினாரா மனைவி?
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் குடமலானி பகுதியில் உள்ள வாலிசா கிராமத்தில் பரபரப்பு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தனது பிறப்புறுப்பை மனைவி வெட்டிவிட்டதாக இளைஞன் ஒருவர் தனது மனைவி மீது புகார் அளித்துள்ளார். தோரிமன்னா காவல்நிலையத்தில் இந்த புகார் கொடுக்கப்பட்டது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இந்த புகாரை பெற்றுக் கொண்டுள்ளதாக, தோரிமன்னா போலீஸ் அதிகாரி சுக்ராம் பிஷ்னோய் தெரிவித்தார். அன்னராம் ஜாட் என்பவருக்கு ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் ஆனதில் இருந்தே, கணவன்-மனைவிக்கு ஒத்துப் போகவில்லை.
கடந்த 1ம் தேதி இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, மனைவி போனில் பேசிக் கொண்டிருந்தார். இதுபற்றி அவர் தனது மனைவியிடம் கேட்டபோது, தனது சகோதரி தன்னை அழைத்ததாக கூறினார். அதன்பிறகு, தனது சகோதரி மற்றும் மைத்துனருடன், மனைவி நீண்ட நேரம் சண்டை போட்டதாக அன்னராம் ஜாட் தெரிவித்தார்.
இந்த சண்டைக்கு பிறகு இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மனைவி அவரது பிறப்புறுப்பை பிளேடால் வெட்டியுள்ளார். வலி தாங்காமல் அலறத் தொடங்கியதும், வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்கள் எழுந்துவந்தனர். பிறப்புறுப்பை வெட்டினால் ஆண்மைக்குறைவு ஏற்படும் என்பதால், தனது பிறப்புறுப்பை வெட்டியதாக மனைவி கூறியதாக கணவர் புகார் அளித்துள்ளார். உடலுறவில் திருப்திபடுத்த முடியாவிட்டால், மனைவிக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து கொள்ள தடை இருக்கது, கணவனை விவாகரத்து செய்யவும் தடை இருக்காது என்பதால் இவ்வாறு தன்னை காயப்படுத்தியதாக, மனைவி மீது கணவர் அன்னராம் ஜாட் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் ஏற்கனவே விசாரணையை தொடங்கியுள்ளனர்.