இன்னும் 3 நாட்களில் சனி ஆட்டம்... இந்த ராசிகளுக்கு உச்ச ராஜயோகம், முழு ராசிபலன்

ச​னி பெயர்ச்சி பலன் 2023: வாக்கிய பஞ்சாங்கத்தின்படி வரும் டிசம்பர் 20 ஆம் தேதி சனி பகவான் மகர ராசியிலிருந்து, கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைய உள்ளார். சனியின் இந்த பெயர்ச்சியால் எந்தெந்த ராசியினருக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

கும்ப ராசி அதிபதியான சனி பகவான், வரும் டிசம்பர் 20ம் தேதி அதே ராயில் பெயர்ச்சி ஆக உள்ளார். இந்த பெயர்ச்சியின் மூலம் சனி பகவான் கும்பத்தில் ஆட்சி, அதிபதியாக அடுத்த இரண்டரை ஆண்டுகள் பயணிப்பார். இதன் மூலம் அடுத்த 2 ஆண்டுகள் சில ராசியினருக்கு அதிர்ஷ்ட பலன்கள் அதிகம் கிடைக்கும். மேலும் திருநள்ளாறு ஆலயத்தின் படி வரும் டிசம்பர் 20ஆம் தேதி சனி பெயர்ச்சி நிகழ் உள்ளதால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

 

1 /13

மேஷம்: சனி பெயர்ச்சி மேஷ ராசியினருக்கு தொழில், வியாபாரத்தில் நல்ல லாபமும், புதிய வாய்ப்புகளையும் பெற்றிடலாம். அத்துடன் கடின உழைப்புக்கு முழு பலன் சிறப்பாக கிடைத்திடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்த சூழல் நிலவும். மனைவியுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

2 /13

ரிஷபம்: சனி பெயர்ச்சி ரிஷப ராசியின் தொழில் வளர்ச்சியடையும். பட்டம், பதவி, புகழ் தேடி வரும். சுய தொழில் தொடங்கலாம். மிகப்பெயர் வளர்ச்சியும் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.   

3 /13

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி மிகச்சிறந்த தன யோகத்தை தரப்போகிறார். லாப ஸ்தானத்தின் மீது சனியின் பார்வை விழுவதால் பொருளாதார தடைகள் நீங்கும். நிறைய பணவரவும், அசையா சொத்துக்கள் மூலம் எதிர்பாராத லாபமும் கிடைக்கும்.   

4 /13

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சனிபகவான் மங்களகரமான பலனைத் தருவார். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வணிக வர்க்கம், பெரிய ஆர்டர்களைப் பெறலாம். இந்த ராசிக்காரர்கள் அதிக லாபம் சம்பாதிப்பார்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். எந்த பெரிய ஆசையும் நிறைவேறும். ஆரோக்கியம் மேம்படும்.   

5 /13

சிம்மம்: சனி பகவானின் பெயர்ச்சியால் சிம்ம ராசியினருக்கு பல விதத்தில் நன்மைகள் கிடைக்கக்கூடியதாக இருக்கும். பண பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் முன்னேற்ற பணிகளை பெற்றிடலாம். உங்களுக்கு வளர்ச்சி உண்டாகும்.    

6 /13

கன்னி: இந்த சனி பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு பொன்னான காலமாக இருக்கும். முழு அதிகாரத்தையும் சனி தருவார். இதுவரை நிறைய சறுக்கலை சந்தித்திருப்பீர்கள். வெற்றி உங்கள் வசம் தேடி வரும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். முழு ராஜயோகம் கிடைக்கப் போகிறது. நோய்கள் தீரும் வம்பு வழக்குகள் சாதகமாக முடியும்.   

7 /13

துலாம்: துலாம் ராசியினருக்கு சனி பெயர்ச்சி பல விதத்தில் சாதகமானதாக அமையும். உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில் முதலீடுகள் மூலம் லாபத்தையும், முதலீடுகள் செய்யவும் சாதகமானதாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  

8 /13

விருச்சிகம்: சனி பகவான் தற்போது அர்த்தாஷ்டம சனியாக பயணம் செய்கிறார்.ஷஷ ராஜயோகம் வரப்போகிறது. புதிய ஆடை, ஆபரணங்கள், வண்டி வாகனங்கள் வந்து சேரும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கவும். வேலைக்கு ஏற்ற ஊதிய உயர்வும் கிடைக்கும். கையில் பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.

9 /13

தனுசு: சனி பெயர்ச்சிக்கு பிறகு உங்களின் கஷ்டங்கள், கவலைகள் நீங்கப்போகிறது. குழந்தை பாக்கியம் உண்டாகும். உயர் பதவி யோகம் உங்களை தேடி வரும். புதிய தொழில் அமையும். இனி உங்களுக்கு முழுமையான ராஜ யோகம் தேடி வரப்போகிறது புகழின் உச்சிக்கு செல்லப்போகிறீர்கள்.  

10 /13

மகரம்: மகர ராசிக்காரர்கள் சனி பெயர்ச்சியால் பொருளாதார ரீதியாகப் பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரைவில் பதவி உயர்வு கிடைக்கும். வணிகர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த விரும்பினால், பின்வாங்க வேண்டாம். இந்த காலம் அதற்கு ஏற்றதாக இருக்கும்.  

11 /13

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியால் சாதகமான பலனைப் பெறுவீர்கள். கும்ப ராசியில் ஷஷ என்ற ராஜயோகமும் உருவாகி வருகிறது. இதன் தாக்கத்தால் உங்கள் ஆளுமை மேம்படும். சமூகத்தில் மரியாதை, கௌரவம் உயரும். பெரியவர்களுடன் உறவை ஏற்படுத்துவதில் வெற்றி பெறுவீர்கள்.  

12 /13

மீனம்: வரும் 20 ஆம் தேதி நடக்கயுள்ள சனிப் பெயர்ச்சியால், மீன ராசிக்காரர்களுக்கு மிகுந்த பலன்களைத் தரும். பதவி உயர்வு மற்றும் புதிய வேலை கிடைக்கும். சம்பளத்தில் பெரிய உயர்வு இருக்கும். தொழிலதிபருக்கு ஒன்றன் பின் ஒன்றாக பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். பணத்தை சேமிப்பதிலும் வெற்றி பெறுவீர்கள். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். வெளிநாடு சுற்றுலா செல்லலாம்.

13 /13

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.