திருமணமாகாத பெண்களும் கலைஞர் உரிமைத் தொகை பெறலாம் - எப்படி?

Kalaingar Magalir Urimai Thogai | தமிழ்நாடு அரசின் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் திருமணமாகாத பெண்களும் பயனாளிகளாக சேர முடியும்

திருமணம் ஆகாத பெண்கள் கலைஞர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) பெற முடியுமா? என்றால் நிச்சயம் முடியும். எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.

1 /9

தமிழ்நாடு அரசு சமூகத்தில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில் ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் அண்மைக் காலத்தில் அதிகமான பெண்கள் பயனடையும் திட்டமாக கலைஞர் உரிமைத் தொகை திட்டம்  (Kalaingar Magalir Urimai Thogai) இருக்கிறது. இந்த திட்டத்தில் சுமார் 1.15 கோடி பெண்கள் பயனாளிகளாக இருக்கின்றனர். 

2 /9

மிகவும் பிரபலமான இந்த திட்டம் சமூகத்தின் அனைத்து தரப்பு பெண்களும் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு பார்த்து பார்த்து வடிவமைத்திருக்கிறது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விதிமுறைகள், தகுதிகள் ஆகியவற்றை விரிவாக நீங்கள் படித்தீர்கள் என்றால் நிச்சயம் இவர்களும் கலைஞர் உரிமைத் தொகை பெற முடியுமா?, இவ்வளவ நாட்கள் தெரியாமல் இருந்துவிட்டோமே? என யோசிப்பீர்கள்.

3 /9

வெறுமனே ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், வறுமை கோட்டிற்கும் கீழ் உள்ள பெண்கள் மட்டும் கலைஞர் உரிமைத் தொகை பெற முடியும் என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், அரசு நிர்ணயித்துள்ள ஆண்டு வருமான உச்ச வரம்பின்படி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ரேஷன் கார்டு பெண்கள் மட்டுமல்லாமல், கைம்பெண்கள் (விதவைகள்), மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த திருநங்கைகள், திருமணம் ஆகாமல் வீட்டில் இருக்கும் பெண்கள் ஆகியோரும் கலைஞர் உரிமைத் தொகை பெற முடியும்.  

4 /9

இதுகுறித்து கலைஞர் உரிமைத் தொகை விதிமுறைகளில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் என்னவென்றால் திருமணம் ஆகாத தனித்த பெண்கள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்ப தலைவிகளாக கருதப்படுவார்கள் என தெரிவித்துள்ளது. அதனால் அவர்களும் இந்த திட்டத்தின கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் பெற தகுதியுடையவர் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

5 /9

அதனால் திருமணம் ஆகாத பெண்கள் எல்லோரும் இந்த விதியை பயன்படுத்தி கலைஞர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாமா? என்றால் முடியாது. வீட்டில் தகுதி வாய்ந்த பெண்கள் யாரும் இல்லாதபோது, சிறப்பு தகுதியின் அடிப்படையில் ஒரு பெண் திருமணம் ஆகாமல் குடும்பத்தை நிர்வகிக்கும்பொறுப்பில்இருந்தால் மட்டுமே இந்த திட்டத்தில் ஆயிரம் ரூபாய் பெற தகுதி உடையவர்களாக கருதப்படுவர்.

6 /9

பொதுவாக கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 21 வயது நிரம்பிய குடும்பத் தலைவிகளாக இருக்கும் பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் பெற முடியும். ஒரே வீட்டில் இரண்டு தகுதி வாய்ந்த பெண்கள் இருந்தால் அதில் ஒருவர் மட்டும் தகுதி வாய்ந்த பயனாளியாக கருத்தில் கொள்ளப்பட்டு அந்த பெண்ணுக்கு ஆயிரம் ரூபாய் அரசு கொடுக்கிறது. 

7 /9

மாற்றுத் திறனாளிகள், முதுகு தண்டுவட நோய், பார்க்கிசன் நோய் உள்ளிட்ட சில வகை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். அவர்கள் அரசின் வேறு ஏதேனும் உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களாகவும் இருந்தாலும் இந்த திட்டத்தின் கீழ் அவர்கள் நிதியுதவி பெற முடியும். 

8 /9

எனவே, இதுநாள் வரை இப்படியான தகவல் தெரியாதவர்கள் உடனடியாக கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கவும். அரசு இ-சேவை மையங்களுக்கு சென்று உரிய ஆவணங்களை கொடுத்து கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரம் தேவைப்பட்டால் கலைஞர் உரிமைத் தொகை இணையதளத்துக்கு சென்று அதில் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கங்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

9 /9

மேலும், அருகில் இருக்கும் வருவாய் கோட்ட அலுவலகத்துக்கு சென்றும் உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றுக் கொள்ளவும். அதிகாரிகளை சந்தித்தால் கூடுதல் விளக்கங்கள் கிடைக்கும். கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் பல சிறப்பு சலுகைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. விரைவில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அதனால் தகுதி வாய்ந்த பெண்கள் உரிய ஆவணங்களும் விண்ணப்பிக்கவும்.