Aadhaar Card address: ஆதார் கார்டில் உள்ள உங்களின் முகவரியை ஆன்லைன், ஆஃப்லைன் என இரண்டு விதத்திலும் புதுப்பித்து கொள்ள முடியும்.
உங்கள் ஆதார் அட்டையை புதுப்பித்து வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. பல்வேறு சேவைகள் மற்றும் நன்மைகளுக்கு ஆதார் பயன்படுகிறது. ஆன்லைனில் ஆதாரில் முகவரியை எப்படி மாற்றுவது என்று பாப்போம்.
UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று (https://myaadhaar.uidai.gov.in/) உங்கள் ஆதார் எண் பயன்படுத்தி உள்நுழையவும். பிறகு 'எனது ஆதார்' என்பதை கிளிக் செய்து 'ஆதாரைப் புதுப்பிக்கவும்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
முகவரி புதுப்பிப்பை கிளிக் செய்து வீட்டின் எண்/பெயர், தெரு, வட்டாரம், கிராமம்/நகரம், மாவட்டம், மாநிலம் மற்றும் பின் குறியீடு உள்ளிட்ட தகவலுடன் படிவத்தை நிரப்பவும்.
உங்கள் பாஸ்போர்ட், வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம், வங்கி அறிக்கை போன்ற சரியான முகவரி ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றவும். உள்ளிட்ட அனைத்து விவரங்களை கவனமாக மதிப்பாய்வு செய்யது 'சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்யவும்.
SMS மற்றும் மின்னஞ்சல் மூலம் புதுப்பிப்பு கோரிக்கை எண்ணைப் (URN) பெறுவீர்கள். எனது ஆதார் போர்ட்டலில் உங்கள் முகவரி புதுப்பிப்பு கோரிக்கையின் நிலையைக் கண்காணிக்க இந்த URNஐப் பயன்படுத்தவும்.