How To Say No Politely : ஒருவருக்கு நாம் நோ சொன்னால், அவர் மனம் புன்பட்டு விடுமோ என்று பல முறை யோசித்திருப்போம். பிறர் மனம் புண்படாதபடி எப்படி நோ சொல்ல வேண்டும் தெரியுமா?
How To Say No Politely : ஒரு விஷயத்தில் உங்களுக்கு விருப்பம் இல்லை எனும் போது, பிறரிடம் அது குறித்து மறுப்பு தெரிவிப்பதற்கு பல சமயங்களில் தயங்கியிருப்போம். காரணம், நாம் அவரது மனம் நாம் இப்படி பேசுவதால் புண்பட்டுவிடுமோ என்று யோசிப்போம். ஆனால், அப்படி ஒருவரை நோகடிக்காமல் அவருக்கு எப்படி நோ சொல்ல வேண்டும் தெரியுமா? இதோ அதற்கான டிப்ஸ்!
“உங்களது உதவியை பாராட்டுகிறேன்..ஆனால் இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது”
“எனக்கு இந்த உதவியை செய்ய வேண்டும் என்று நினைத்ததற்கு மிக்க நன்றி. ஆனால், என்னால் இந்த சமயத்தில் அதை ஏற்றுக்கொள்ள முடியாது”
“உங்கள் அழைப்பு என்னை மகிழ்ச்சியடைய வைத்தது. ஆனால், என்னால் அங்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது”
“உங்கள் அழைப்பிற்கு மிக்க நன்றி. ஆனால், என்னால் அங்கு இன்று வர இயலாது. நீங்கள் அங்கு சிறந்து விலங்க ஆல் தி பெஸ்ட்”
“துரதரிஷ்ட வசமாக அங்கு வருவதற்கு எனக்கு நேரமில்லை"
“நீங்கள் என்னிடம் வந்து அந்த உதவியை கேட்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், நான் இப்போதைக்கு உதவும் சூழலில் இல்லை”
“இப்போதைக்கு நான் வேறு வேலைகளில் பிசியாக இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது நீங்கள் கூறியது பற்றி யோசிக்கிறேன்”
“எனக்கும் உதவி செய்ய ஆசைதான். ஆனால், நான் வேறு பணிகளில் மூழ்கியிருப்பதால் இப்போதைக்கு என்னால் இதில் கவனம் செலுத்த முடியாது”