BSNL 4G MNP Process: இந்தியாவில் பலர் தங்கள் பழைய டெலிகாம் நிறுவனங்களின் சேவைகளுக்கு பதிலாக பிஎஸ்என்எல்லின் 4ஜி சேவைகளுக்கு மாற நினைக்கிறார்கள், ஏனெனில் சமீபத்தில் இந்த நிறுவனங்கள் தங்கள் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளன. இதற்கு காரணம் என்ன?
ஜியோ, வி மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் தங்களின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலையை சுமார் 15 சதவீதம் உயர்த்தியுள்ளன. இது தவிர, இந்த நிறுவனங்களின் வருடாந்திர திட்டங்களும் சுமார் 500 முதல் 600 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளன.
ஜூலை மாதத்தில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் இணைந்துள்ளனர். பிற நிறுவனங்களின் அதிரடி விலை உயர்வால், அதிகமான மக்கள் பிஎஸ்என்எல் சேவைகளை நோக்கி செல்கின்றனர்.
உங்களுக்கும் விலை குறைவான ஆனால் நல்ல சேவையுடன் கூடிய பிஎஸ்என்எல் 4ஜி இணைப்பு வேண்டுமா? எண்ணை மாற்றாமலேயே தொலைதொடர்பும் நிறுவனத்தை மாற்றும் வசதியை பயன்படுத்துங்கள்.
தொலைதொடர்பு நிறுவனங்களின் சேவை மாற்ற வேண்டுமானால் ஒருவர் தனது மொபைல் எண்ணை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இப்படி ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொன்றுக்கு எண்ணை மாற்றாமலேயே சேவையை மாற்றுவதற்கு போர்ட் என்று பெயர்
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு போர்ட் வசதி நல்ல வாய்ப்பைக் கொடுக்கிறது. அரசு நிறுவனம் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் திட்டங்களை விட தனது ரீசார்ஜ் திட்டங்கள் மலிவானது என பெரிய அளவில் விளம்பரப்படுத்தியுள்ளது, தற்போது நாட்டில் சில இடங்களில் மட்டுமே பிஎஸ்என்எல் 4G சேவைகள் கிடைக்கிறது, அடுத்த மாதம் முதல் நாடு முழுவதும் 4ஜி சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, உங்கள் மொபைல் எண்ணை BSNL க்கு போர்ட் செய்ய நினைத்தால், அதை எப்படி செய்வது என்பதை தெளிவாக தெரிந்துக் கொள்ளுங்கள்
படி 1: உங்கள் மொபைல் எண்ணை போர்ட் செய்ய, தனித்த போர்டிங் குறியீட்டைப் (UPC) பெற 1900 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும். அதில் '10 இலக்க மொபைல் எண்ணை போர்ட் செய்யவும்' என்று குறிப்பிட வேண்டும். , PORT XXXXXXXXXX என குறுஞ்செய்தி அனுப்பவும். ஜம்மு மற்றும் காஷ்மீரில் ப்ரீபெய்டு மொபைல் பயனர்கள் மட்டும் SMS அனுப்புவதற்குப் பதிலாக 1900 என்ற எண்ணிற்கு அழைத்து டோல்ப்ரீ எண்ணில் பேசினால், சேவை மாற்றப்படும்.. உங்களுக்கு வழங்கப்பட்ட UPC எல்லா இடங்களிலும் 15 நாட்களுக்கு வேலை செய்யும், ஆனால் ஜம்மு மற்றும் காஷ்மீர், அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 30 நாட்களுக்கு வேலை செய்யும்.
படி 2: பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் (சிஎஸ்சி) அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் கடைக்குச் சென்று மொபைல் எண் போர்ட்டிங்க் செய்துக் கொள்ளலாம்
படி 3: வாடிக்கையாளர் விண்ணப்பப் படிவத்தை (CAF) பூர்த்தி செய்து கொடுக்கவும். தற்போது பிஎஸ்என்எல் போர்டிங்கிற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கவில்லை.
படி 4: இதன்பிறகு, புதிய BSNL சிம் கார்டு வழங்கப்படும். உங்கள் போர்ட்டிங் கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டதும், உங்கள் எண் எப்போது போர்ட் செய்யப்படும் என்பதை BSNL உங்களுக்குத் தெரிவிக்கும். அதற்கு ஏற்றாற்போல உங்கள் சிம் கார்டை மாற்ற வேண்டும். ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், 1800-180-1503 அல்லது 1503 என்ற கட்டணமில்லா எண்ணை அழைக்கவும்.