மாதவிடாய் கோளாறா? இயற்கையாக சரிசெய்ய..‘இதை’ சாப்பிடுங்க..!

Menstrual Cycle : பெண்மணிகள் பலர், மாதவிடாய் கோளாறு காரணமாக அவதிப்படுவர். இதை சரிசெய்ய, சில இயற்கையான வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? 

Menstrual Cycle : மாதவிடாய் கோளாறு காரணமாக பல லட்சம் மகளிர், அவதிப்படுகின்றனர். தைராய்டு, நீர்க்கட்டி உள்பட பல  பிரச்சனைகள் இதற்கு காரணமாக கூறப்படுகின்றன. இதை சரிசெய்ய, இயற்கையாகவும் சில வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம். 

1 /7

மாதவிடாய் சரியான நேரத்தில் வராமல் இருப்பதற்கு பல காராணங்கள் இருக்கலாம். அவற்றை இயற்கையாக சரிசெய்யவும் சில வழிமுறைகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? 

2 /7

Vitamin C:  வைட்டமின் சி சத்துகள் கொண்ட உணவுகளை சாப்பிடுவது, மாதவிடாய் பிரச்சனையை சரி செய்ய உதவும்.

3 /7

மஞ்சள், உடலில் ஏற்படும் பல்வேறு ஹார்மோன் பாதிப்புகளை போக்குவதாக கூறப்படுகிறது. இது, மாதவிடாய் வரவழைக்கும் ஹார்மோன்களை சீர் செய்வதற்கும் உதவுவதாக கூறப்படுகிறது.

4 /7

அன்னாசி பழம்: அன்னாசியில், மாதவிடாயை வரவழைக்கும் ஹார்மோன்களை சீர் செய்யும் சத்து உள்ளதாம்.

5 /7

பப்பாளி:  பப்பாளி பழத்தில் இருக்கும் கேரோட்டின் சத்து, எஸ்ட்ராஜென் ஹார்மோன்களை சரிசெய்ய உதவுகிறது. இதனால், மாதவிடாய் நாட்களுக்கு முன்னர் இதை சாப்பிட்டு வர, சரியான நேரத்தில் மாதவிடாய் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

6 /7

இஞ்சி: இஞ்சி, உடல் சூடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையுமாம். இதை கொதிக்க வைத்து குடிப்பதனாலும் மாதவிடாய் வரவழைக்கலாம் என கூறப்படுகிறது.

7 /7

கொத்தமல்லி விதைகள்: மாதவிடாய் காலத்தில் அதிகமான ரத்தப்போக்கை, கொத்தமல்லி விதைகள் தவரிப்பதாக சில ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. மாதவிடாய் சமயங்களில் வயிற்றுவலி, வயிறு உப்பசம் போன்றவற்றையும் கொத்தமல்லி விதைகள் தடுக்குமாம். (பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)