HDFC வங்கி வாடிக்கையாளரா? உங்கள் பணத்தை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது? ஆன்லைன் வங்கி மோசடிகளைத் தவிர்க்க, நீங்கள் செய்யக்கூடியது மற்றும் செய்யக்கூடாதது பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.
எச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank) லிமிடெட் சைபர் மோசடிகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும் அவற்றைத் தடுப்பதற்கும் “வாயை மூடுங்கள்" (Mooh Band Rakho) என்ற பிரச்சாரத்தை தொடங்கப்படுவதாக அறிவித்துள்ளது. அடுத்த 4 மாதங்களில் நாடு முழுவதும் 1,000 விழிப்புணர்வு முகாம்களை நடத்தவுள்ளது. அட்டை விவரங்களைப் பகிர்ந்து கொள்ளாது இருப்பது. சி.வி.வி (CVV), காலாவதி தேதி, ஓடிபி (OTP) நெட்பேங்கிங் / மொபைல் பேங்கிங் உள்நுழைவு ஐடி (Login ID) மற்றும் கடவுச்சொல் (Password) போன்றவற்றை தொலைபேசி, எஸ்எம்எஸ், மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக பகிர்ந்துக்கொள்ளாமல் இருக்க, சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும், பொதுமக்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.
-எச்.டி.எஃப்.சி வங்கி அல்லது வேறு எந்த வங்கியும் உங்கள் உங்கள் ஓடிபி, நெட் பேங்கிங் / மொபைல் பேங்கிங் கடவுச்சொல், வாடிக்கையாளர் ஐடி, யுபிஐ பின் ஆகியவற்றைக் கேட்காது. - ரகசிய விவரங்களை தொலைபேசி, எஸ்எம்எஸ், மின்னஞ்சல் மூலம் யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
-கடவுச்சொற்கள், வங்கி விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். -உங்கள் முகவரி, தொடர்பு எண் அல்லது மின்னஞ்சல் ஐடியை மாற்றும்போது உங்கள் வங்கிக்கு தெரிவிக்கவும். -உங்கள் கணக்கு / அட்டையில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனை காணப்பட்டால் எச்.டி.எஃப்.சி வங்கி பிரதிநிதி உங்களை அழைப்பார். தொலைபேசி எண் - 61607475 இலிருந்து வங்கி அழைக்கும்.
-உங்கள் தொடர்பு பட்டியலில் உங்கள் பிராந்திய தொலைபேசி வங்கி எண்ணை எப்போதும் சேமிக்கவும், இது உங்கள் அட்டை தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால் அல்லது சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனை எச்சரிக்கையைப் பெறும்போது அவசர காலங்களில் உதவும். எச்.டி.எஃப்.சி வங்கியின் தொலைபேசி வங்கியை அடைய 61606161 அல்லது கட்டணமில்லா எண் - 18002586161 என்ற எண்ணில் அழைக்கலாம். உங்கள் மொபைல், டேப்லெட் (Tablet) , லேப்டாப் (Laptop) , பொது / இலவச வைஃபை (Wi-Fi) உடன் இணைக்கப்படும்போது, அது திறந்த மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வங்கி பரிவர்த்தனைகளை நடத்த வேண்டாம்.
மோசடியின் தாக்கத்தைக் குறைப்பதற்காக மோசடி விழிப்புணர்வு வாரம் நவம்பர் 15 முதல் 21 வரை நடைபெற்று. இந்த பிரசாரத்தில் 2வது ஆண்டாக எச்.டி.எஃப்.சி வங்கி பங்கேற்கிறது. COVID 19 ஐ எதிர்த்துப் போராடுவதற்காக “வாயை மூடுங்கள்" (Mooh Band Rakho) பிரச்சாரம் ஆரம்பத்தில் வங்கியால் தொடங்கப்பட்டது, அது இப்போது இணைய மோசடிக்கு எதிராக நீட்டிக்கப்பட்டுள்ளது.
"அதிகமான மக்கள் ஆன்லைனில் வங்கி சேவைகளை அணுகுவதால் இந்த பிரச்சாரம் காலத்தின் தேவையாக உள்ளது. நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்களுக்காக பாதுகாப்பான வங்கி பரிவரத்தனை குறித்து நாங்கள் விழுப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறோம் என எச்.டி.எஃப்.சி வங்கியின் தலைமை இடர் அதிகாரி ஜிம்மி டாடா கூறினார்.