மனசு குரங்குபோல் தாவுவதை கட்டுப்படுத்தும் 7 சிரஞ்சீவி மந்திர டிப்ஸ்

மனம் கவனச்சிதறல்களால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றால் அதனை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை பார்க்கலாம்

Mindfulness Techniques ; குரங்கு ஒரு கிளையில் குதித்து குதித்து ஓடுவதைப் போல மனதில் இருக்கும் கவலைகளால், கவனச்சிதறல்கள் ஏற்பட்டு மன அழுத்தம், பதட்டம் ஏற்படும் என்பதால் இவற்றில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம். 

1 /7

சுவாசப்பயிற்சி - உங்களின் குரங்கு மனதை அமைதிப்படுத்த எளிய வழிகளில் ஒன்று சுவாச பயிற்சி. இது உங்களை அமைதிப்படுத்தி, கவனம் செலுத்துவதற்கு உதவும். சுவாசப் பயிற்சியின்போது காற்று நுழைவது மற்றும் வெளியேறுவதை முழுமையாக கவனிக்கவும்.

2 /7

வெளியில் நேரத்தை செலவிடுங்கள் - வெளியில் என்று சொன்னால், கிளப்புகள் அல்லது உணவகங்களுக்குச் செல்வது என்று அர்த்தமல்ல. இயற்கையில் வெளியில் நேரத்தை செலவிடுவதாகும். மலைப்பாங்கான இடங்களுக்கு சுற்றுலா செல்லுங்கள். யாரும் இல்லாத ஆற்றங்கரையில் உட்கார்ந்து கொள்ளுங்கள். அன்றாட வாழ்க்கையின் சத்தங்களைத் தவிர்த்து மலைகளில் ஏறுங்கள். இவை உங்களுக்குள் புத்துணர்ச்சியை கொண்டு வரும்.

3 /7

தேங்கி நிற்காதீர்கள் - போதுமான அளவு செயல்படவில்லை என்றால் மட்டும் மனம் குரங்குபோல் தாவி ஓடிக்கொண்டிருக்கும். அதனால் உங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரே ரூமுக்குள் ஒருநாளின் அதிக நேரம் செலவிடுபவர்களுக்கு இந்த பிரச்சனை இருக்கும். புதுமையான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சிறந்தது.

4 /7

சாப்பிடுவதில் கவனம் - மொபைல் ஃபோன்கள் மற்றும் டேப்லெட்டுகள் மிக எளிதாக அணுகக்கூடியதாகிவிட்டதால், மக்கள் தங்கள் தொழில்நுட்பங்களிலேயே மூழ்கிவிடுகிறார்கள். தூங்குவதற்கு முன், தூங்கி எழுந்தவுடன், உடற்பயிற்சி செய்யும் போது, சாப்பிடும் போது என வரைமுறை இல்லாமல் அவற்றை பயன்படுத்துகிறார்கள். இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, சாப்பிடும்போது அதனை முழுமையாக அனுபவித்து சாப்பிட பழகிக்கொள்ளுங்கள். உணவின் சுவையில் கவனம் செலுத்துங்கள். 

5 /7

டிஜிட்டல் டிடாக்ஸ் - நாள் ஒன்றுக்கு 5 மணி நேரத்துக்கும் மேலாக தொழில்நுடங்களை பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு டிஜிட்டல் டிடாக்ஸ் அவசியம். குறைந்தபட்சம் ஒரு அரைமணி நேரமாவது அதனை பயன்படுத்தாமல் இருக்க பழகிக் கொள்ளுங்கள். 

6 /7

இவற்றையெல்லாம் உங்கள் தினசரி வாழ்க்கையில் பின்பற்ற தொடங்கினீர்கள் என்றால் குறிப்பிட்ட சில மாதங்களில் உங்கள் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றத்தை காண்பீர்கள். உங்களின் எண்ண ஓட்டம் எல்லாம் மாறியிருக்கும். 

7 /7

குரங்கு மனதை நீண்ட நாட்களாக உங்களுக்கு இருக்கிறது என்றால் அவை ஆரோக்கியத்திலும் பிரச்சனை ஏற்படுத்தும். இது உங்களின் நிம்மதியான வாழ்க்கைக்கும் ஆபத்து என்பதால் கொஞ்சம் வாழ்க்கைமுறையில் கவனம் செலுத்துங்கள்.