CIBIL Score: இதை கடைபிடியுங்கள் போதும்... கிரெடிட் ஸ்கோர் 750+ ஆக எகிறி விடும்!

கிரெடிட் ஸ்கோர் சிறப்பாக இருந்தால்தான் வங்கிகளிடமிருந்து எந்த வகையான கடனையும் எளிதாகவும் குறைந்த வட்டியிலும் பெற முடியும். எனவே மதிப்பெண் குறையாமல் இருக்கவும், குறைந்த மதிப்பெண்ணை அதிகரிக்கவும் கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.

கிரெடிட் ஸ்கோர் அல்லது சிபில் ஸ்கோர் என்பது, கடனை திருப்பிச் செலுத்துவதற்கான உங்கள் பொறுப்பை எவ்வாறு திறம்பட நிர்வகிக்கிறீர்கள் என்பதை எடுத்துக்காட்டும் மதிப்பெண்.

1 /6

கடனுக்கான தேவை என்பது நம் எல்லோரும், வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் சந்திக்கும் ஒரு விஷயம் என்றால் மிகை இல்லை. அந்த சமயத்தில் கடனை எளிதாக பெற நமது சிபில் ஸ்கோர் என்னும் கிரெடிட் ஸ்கோர் சிறப்பாக இருந்தால் பிரச்சனை ஏதுமின்றி கடனை பெறலாம். அதோடு வட்டியும் குறைவாக இருக்கும்.

2 /6

நமது மாதாந்திர கிரெடிட் கார்டு பில்களையும், கடன் இஎம்ஐ தொகையையும், வீட்டு உபயோகம் தொடர்பான, மின்சார பில் போன்ற கட்டணங்களையும் சரியான நேரத்தில் செலுத்தினால், நமது சிபில் ஸ்கோர் சிறப்பாக இருக்கும்.  

3 /6

கிரெடிட் கார்டை உபயோகப்படுத்தும் போது, உங்களுக்குள்ள வரம்பை முழுவதுமாக பயன்படுத்துவது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். அதனால், கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது 30 அல்லது 40 % மிகாமல் இருப்பது பயனை கொடுக்கும்.

4 /6

கடனுக்காக விண்ணப்பிக்கும் போது, கவனமாக இருக்கவும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற அடிக்கடி விண்ணப்பம் செய்தால், அது உங்களை கிரெடிட் ஸ்கோரை மிகவும் பாதிக்கும். அடிக்கடி கடன் வாங்கும் போக்கு, நிதியை சரியாக நிர்வகிக்க தெரியவில்லை என்ற கண்ணோட்டத்தை கொடுக்கிறது.

5 /6

அதிக அளவில் தனிநபர் கடன் வாங்குவது, பிணை இல்லாத கடன் வாங்குவது ஆகியவை, உங்கள் கிரெடிட் ஸ்கோரை பெரிதளவு பாதிக்கும். எனவே தேவை ஏற்பட்டால் மட்டுமே கடன் வாங்கவும்.

6 /6

மேலே கூறப்பட்டுள்ள விஷயங்களை கவனத்தில் கொண்டால், உங்கள் கிரெடிட் ஸ்கோர், எப்போதுமே 750 பிளஸ் என்ற அளவில் இருக்கும். இதனால் கடன் வாங்குவதில் சிக்கல் இருக்காது என்பதோடு, குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும்.