தவறான வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி விட்டீர்களா.. திரும்ப பெறுவது எப்படி..!!!

இப்பொழுது வேறொருவரின் கணக்கில் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதாகி விட்டது. UPI, நெட் பேங்கிங் அல்லது மொபைல் வாலட் என பல வசதிகள் உள்ளன.  UPI, நெட் பேங்கிங் அல்லது மொபைல் வாலட் என பல வசதிகள் உள்ளன. ஒருவரின் கணக்கில் பணம் செலுத்த வங்கிக்கு போக வேண்டிய அவசியம் இல்லை.  கணிணி அல்லது ஸ்மார்ட் போன் இருந்தால் போதும்.

ஆனால், அதில், சில சிக்கல்களும் உள்ளன. நீங்கள் தவறுதலாக வேறொருவரின் கணக்கிற்கு பணத்தை மாற்றினால், அதை எப்படி திரும்ப பெறுவது என பார்க்கலாம்.

1 /6

நீங்கள் தவறுதலாக வேறொருவரின் கணக்கிற்கு பணத்தை அனுப்பி விட்டீர்கள் என்று தெரிந்தவுடன், உடனடியாக உங்கள் வங்கிக்குத் தெரிவிக்கவும். வாடிக்கையாளர் உதவி எண்ணை அழைத்து முழு விபரத்தையும் தெரிவிக்கவும். பரிவர்த்தனையின் தேதி மற்றும் நேரம், உங்கள் கணக்கு எண் மற்றும் தவறுதலாக பணம் மாற்றப்பட்ட கணக்கு ஆகியவற்றைக் குறிப்பிடவும்.

2 /6

நீங்கள் பணம் அனுப்பிய வங்கி கணக்கு இல்லை என்றால், பணம் தானாகவே திருப்பித் தரப்படும். ஆனால் அவ்வாறு இல்லையென்றால், தவறான பரிவர்த்தனை பற்றி மேலாளரிடம் தெரிவிக்க உங்கள் வங்கியை அணுக வேண்டும். அங்கே, வங்கி பயனாளியின் விவரங்களை சரிபார்த்து, அதே கிளையில் அந்த நபர் கணக்கு ஒன்றை வைத்திருந்தால், பணத்தை திருப்பித் தருமாறு வங்கி அவரிடம் கோரலாம். தவறுதலாக பணம் வேறு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டிருந்தால், அதைத் திரும்பப் பெற அதிக காலம் ஆகலாம். இதுபோன்ற வழக்குகளைத் தீர்ப்பதற்கு வங்கிகளுக்கு 2 மாதங்கள் வரை கூட ஆகலாம்.

3 /6

பணத்தை திருமப் தர ஒத்துழைக்காத பயனாளியின்  விவரங்கள் உங்களிடம் இருந்தால், நீங்கள்  சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கலாம்.

4 /6

குறிப்பாக, பணத்தைத் திரும்பி வரவில்லை என்றால், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விதியின் கீழ் நடவடிக்கை இருக்கும். ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, பணம் செலுத்தும் போது சரியான பயனாளி கணக்கு எண் மற்றும் பிற விவரங்களை வழங்குவது பணம் செலுத்துபவரின் பொறுப்பு என கூறப்பட்டுள்ளது.

5 /6

பணம் தவறாக வேறொருவரின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டால் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. உங்கள் பணத்தை தவறான கணக்கிலிருந்து சரியான கணக்கிற்கு திருப்பிச் செலுத்துவதற்கு வங்கி பொறுப்பு.

6 /6

ஒரு பரிவர்த்தனையை மேற்கொண்ட பிறகு, பயனாளியின் ஒப்புதல் இல்லாமல் வங்கி அதை மாற்ற முடியாது. வங்கி அதற்கான வழிகளை ஏற்படுத்தி கொடுப்பவராக மட்டுமே செயல்பட முடியும்.