பிறப்புறுப்பில் அடிக்கடி அரிப்பு ஏற்படுகிறதா? உடனே நிறுத்த ‘இதை’ பண்ணுங்க..

Vaginal Yeast Infection Home Remedies: மகளிர் பலருக்கு, பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும் பிரச்சனை இருக்கும். இதை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்? டிப்ஸ் இதோ!

Vaginal Yeast Infection Home Remedies: மாதவிடாய், அதிக வெள்ளைப்படுதல் காரணமாக பெண்கள் பலருக்கு பிறப்புருப்பில் எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அவர்கள் உடுத்தும் உள்ளாடைகளை வைத்தும், இந்த பிரச்சனை ஏற்படலாம். இளம் வயதில் இருக்கும் பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டால், அதை அவர்கள் வெளியில் சொல்லவே தயங்குவதும் உண்டு. இதை சரிசெய்ய, சில வீட்டு வைத்தியங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?

1 /7

பெண்களுக்கு, மாதவிடாய் ஏற்படுவதனாலும் வெள்ளைப்படுதல் காரணமாகவும் பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படலாம். 

2 /7

இதை தடுப்பதற்கு சில வீட்டு வைத்தியங்கள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா? 

3 /7

கற்றாழையின் சாற்றில் பல மேஜிக் நன்மைகள் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இதில் உள்ள இதில் பூஞ்சை தடுப்பு சக்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதை உபயோகித்தால் அரிப்பு நிற்கும் என்றும் சில மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

4 /7

தொற்று ஏற்பட்டிருக்கும் இடத்தில் ஆப்பிள் சைடர் வினீகரை உபயோகித்தால் பயன் தரும் என கூறப்படுகிறது. இது, பிறப்புறுப்பில் ஏற்படும் இன்ஃபெக்‌ஷனை சரி செய்யும் என அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம், அதன் மருத்துவ அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. 

5 /7

கிரீன் டீயில், உடலின் ஆற்றலை அதிகப்படுத்தும் சத்துகள் உள்ளன. இது, சருமத்திற்கு நன்மை பயக்கவும் செய்கிறது. 

6 /7

பெப்பர்மிண்ட் எண்ணெயில், சரும தொற்றுகளை நீக்கும் சக்தி உள்ளதாக கூறப்படுகிறது. இது பிறப்புறுப்பில் இருக்கும் பிரச்சனையை மட்டுமன்றி, வாய் புண்ணையும் சரி செய்யுமாம். 

7 /7

டீ ட்ரீ ஆயில், பாக்டீரியாக்க்களை அழிக்கும் சக்தி இருக்கிறது. இதை, தேன் மற்றும் வெந்நீரில் கலந்து அரிப்பு ஏற்படும் இடத்தில் தேய்த்தால் பலன் கிடைக்கும். (பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)