ஒருவர் எத்தனை கிரெடிட் கார்டு வைத்து கொள்ள முடியும்? ஆர்பிஐ விதிகள்!

இந்தியாவில் ஒரு நபர் சட்டப்பூர்வமாக எத்தனை கிரெடிட் கார்டுகளை வைத்திருக்க முடியும்? ஏதேனும் வரம்பு உள்ளதா? முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

 

1 /6

சமீபத்திய நாட்களில் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாத கடைசி அல்லது நிதி நெருக்கடியில் இவை அதிகம் உதவுகின்றன.  

2 /6

உங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு தொகை இருந்தாலும் சரி, உங்களால் கிரெடிட் கார்டு பெற முடியும். பல வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டை வாரி வழங்குகின்றன.   

3 /6

ஒரு தனி நபர் எத்தனை கிரெடிட் கார்டு வேண்டும் என்றாலும் வைத்து கொள்ளலாம். தனியாக ஆர்பிஐ இதற்கு இந்த ஒரு வரம்பையும் கொடுக்கவில்லை. எந்த வங்கியிலிருந்தும் எத்தனை கிரெடிட் கார்டு வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம்.  

4 /6

உங்களால் எத்தனை கிரெடிட் கார்டுகளை வாங்க முடியும் என்பது உங்கள் CIBIL ஸ்கோரைப் பொறுத்தது. இதற்கு முன்பு நீங்கள் வாங்கிய கடன் மற்றும் அதன் நிலுவை தொகையை பொறுத்து தீர்மானிக்கப்படும்.   

5 /6

உங்கள் கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருந்தால் அதிக மதிப்புடன் கூடிய கிரெடிட் கார்டை வாங்க முடியும். கிரெடிட் ஸ்கோர் கம்மியாக இருக்கும் பட்சத்தில் மதிப்பு குறைக்கப்படும்.   

6 /6

ரிசர்வ் வங்கி விதிகள் இல்லை என்றாலும், உங்களுக்கு கிரெடிட் கார்டுகளை வழங்குவது மற்றும் வழங்காமல் இருப்பது அந்த அந்த வங்கிகளின் தனிப்பட்ட முடிவு ஆகும். எந்தவொரு நிதி சிக்கல்களையும் தவிர்க்க உங்கள் கிரெடிட்டை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது அவசியம்.