ஹர்திக் பாண்டியா பயிற்சியின்போது ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் குணமாகவில்லை
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக போட்டி தொடங்க இருக்கிறது
இப்போட்டிக்கு முன்பாக பாலிவுட் திரை நட்சத்திரங்களில் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்திய அணிக்கு ஒரு மோசமான செய்தி கிடைத்துள்ளது. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயமடைந்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலேயே காயத்துடன் தான் பிளேயிங் லெவனில் இடம்பெற்று விளையாடினார்.
ஆனால் இதுவரை அவரின் காயம் குணமாகவில்லை. சிறிய அளவிலான ரத்த உறைவு தான் என்றாலும், அணி நிர்வாகம் அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இருப்பினும் அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நாளை நடைபெறும் உலக கோப்பை போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.