ஹர்திக் பாண்டியா எதிர்காலம் இன்னும் 2 போட்டிகளில் தெரிந்துவிடும்- ஹர்பஜன்

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா தொடர்ச்சியாக இடம்பெறுவது குறித்து இன்னும் இரண்டு போட்டிகளில் தெரிந்துவிடும் என ஹர்பஜன் சிங் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக ஹர்திக் பாண்டியா எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாததால் அவரின் இடம் இன்னும் ஒரு சில போட்டிகளில் தெரிந்துவிடும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்

1 /8

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி குரூப் 8 சுற்றுகளுக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்திய அணி இடம்பெற்றுள்ள குரூப்பில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அல்லது நெதர்லாந்து அணிகள் இடம்பெறுகின்றன.

2 /8

பிளேயிங் லெவனைப் பொறுத்தவரை இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும், குரூப் ஏ போட்டிகளில் தீர்க்கமான வெற்றியை எல்லாம் ரோகித் படை பெறவில்லை.

3 /8

இதற்கு மிக முக்கிய காரணம் பேட்டிங். சீராக எந்த பிளேயரும் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ரிஷப் பன்டுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுக்கலாம். மற்றவர்கள் யாரும் ஓரளவு பேட்டிங் கூட ஆடவில்லை.

4 /8

குறிப்பாக விராட் கோலி பேட்டிங் படுமோசமாக இருந்தது. சூர்யகுமார் கனடா அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் சிறப்பாக ஆடினார். ரோகித் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆடினார்.

5 /8

இது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பவுலிங் சிறப்பாக இருக்கிறது. பும்ரா, அர்ஷ்தீப் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் மெச்சத்தகுந்த வகையில் பந்துவீசியுள்ளனர்.

6 /8

ஆனால் பேட்டிங்கில் ஹர்திக் பாண்டியா எதிர்பார்த்தளவுக்கு விளையாடவில்லை. அவர் இப்படியே பேட்டிங்கில் சொதப்பிக் கொண்டிருந்தால் தொடர்ச்சியாக இந்திய அணியில் இடம் பிடிப்பது கடினம் என்கிறார் ஹர்பஜன் சிங்.

7 /8

அவருக்கு இருக்கும் திறமை எல்லோருக்கும் தெரியும் என்றாலும், அந்தளவுக்கான பேட்டிங்கை ஹர்திக் கட்டாயம் டி20 உலக கோப்பை குரூப் 8 போட்டிகளில் வெளிப்படுத்த வேண்டும். அவரின் பேட்டிங் தான் இந்திய அணியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

8 /8

ஹர்திக் பாண்டியாவுக்கும் இது தெரியும் என்பதால், அவர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.