Happy Birthday Arya: ஆர்யாவின் இந்த படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!

Happy Birthday Arya: நடிகர் ஆர்யா டிசம்பர் 11 ஆம் தேதியான இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.  அறியும் அறியாமலும் படத்தின் மூலம் அறிமுகமான ஆர்யா பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். சாக்லேட் பாய் முதல் குத்துசண்டை வரை பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.  

 

1 /5

நான் கடவுள் (2009) பாலா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் நான் கடவுள். இந்த படத்தில் ஆர்யா ஒரு அகோரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்காக சிறந்த நடிகர் பிரிவில் பிலிம்பேர் விருது பெற்றார்.

2 /5

பாஸ் என்கிற பாஸ்கரன் (2010) ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் பாஸ் என்கிற பாஸ்கரன்.  ஆர்யா மற்றும் சந்தானத்தின் காமெடியில் படம் முழுக்க பல காட்சிகள் சிறப்பாக அமைந்து இருக்கும்.  

3 /5

மதராசப்பட்டினம் (2010) ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் மதராசப்பட்டினம். 1940களின் பின்னணியில் கதை நடக்கிறது.  இப்படத்தில் எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார்.   

4 /5

ராஜா ராணி (2013) இயக்குனர் அட்லீ இயக்கிய முதல் படம் ராஜா ராணி. இந்த படத்தில் ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா, ஜெய், நஸ்ரியா ஆகியோர் நடித்து உள்ளனர்.    

5 /5

சார்பட்டா பரம்பரை (2021) பா ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடித்துள்ள படம் சார்பட்டா பரம்பரை. 1970 களில் நடக்கும் குத்துசண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்தது. இப்படத்திற்காக ஆர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.