மகாலட்சுமியின் கருணை மழையால் கோடீஸ்வரராகும் 5 ராசிகள்

Lucky Zodiac Signs and Godess Lakshmi: மகாலட்சுமியின் கருணைப் பார்வையை பெற்று செல்வத்தில் திளைக்கப்போகும் 5 ராசிகள் இவை. உங்களுடைய ராசியும் இவற்றில் ஒன்றா?

இந்த 5 ராசிக்காரர்கள் கண்டிப்பாக ஒரு கட்டத்தில் செல்வந்தர்களாக மாறுவார்கள் என்று உறுதியாக சொல்லலாம். ஏனென்றால், மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை இவர்கள் மீது கருணையுடன் விழும். ஆடி மாதத்தில் அன்னையின் மீதான இறைபக்தியுடன் நல்ல காரியங்களில் ஈடுபட்டு இறையருள் பெறுவோம்!!

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஜீ மீடியா இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சிக்கலில் சிக்கப் போகும் 3 ராசிகள்

1 /6

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இதனாலேயே இவர்களது வாழ்வில் சுக்கிரனின் தாக்கத்தால் ஆடம்பரம், காதல் வாழ்க்கை மற்றும் பண வரவு என அனைத்தும் பெற்று மகிழ்வுடன் வாழ்வார்கள். கடினமாக உழைப்பாளியான ரிஷப ராசியினர் மீது அன்னை லட்சுமி அன்பாக கருணை பாலிக்கிறார்.  

2 /6

கடக ராசியின் அதிபதி சந்திரன். கடக ராசிக்காரர்கள் தங்கள் அதிர்ஷ்டம் மற்றும் கடின உழைப்பின் அடிப்படையில் நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள். இலக்குகளைத் துரத்தும் பழக்கம் அவர்களை மிகவும் பணக்காரர்களாகவும் வெற்றிகரமானதாகவும் ஆக்குகிறது. அன்னை லட்சுமியின் அருளால் அவர்கள் வாழ்வில் எதற்கும் குறைவிருக்காது.

3 /6

சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன். சூரியனின் தாக்கத்தால் சிம்ம ராசிக்காரர்களின் ஆளுமை  தன்னம்பிக்கை நிறைந்ததாக இருக்கும். அவர்கள் நல்ல தலைவர்களாக இருப்பதுடன், பெயரும் புகழும் பெறுவார்கள்.  

4 /6

விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். தைரியமும், அச்சமற்றவர்களாகவும் இருக்கும் விருச்சிக ராசிக்காரர்கள் ஆபத்துகளைக் கண்டு அஞ்சுவதில்லை. கடின உழைப்பு மற்றும் புத்திசாலித்தனத்தின் வலிமையால் அவர்கள் பணக்காரர்களாகி எல்லா சுகங்களையும் பெறுகிறார்கள்.

5 /6

தனுசு ராசியின் அதிபதி வியாழன்.  சுப கிரகமான வியாழனின் அருளால், தனுசு ராசிக்காரர்கள் வேலை செய்து பெரிய வெற்றியைப் பெறுவார்கள். அவர்களுக்கு நிறைய அதிர்ஷ்டம் உண்டு. கூடவே அன்னையின் அருளும் அவர்களுக்கு இருப்பதால் செல்வந்தர்களாகும் யோகமும் தனுசு ராசியினருக்கு உண்டு.

6 /6

அன்னையின் அருட்பார்வை இருந்தால் மலையும் மடுவாகும் எனும்போது, பிச்சாதிபதியும் லட்சாதிபதியாவார் என்பதில் சந்தேகமே இல்லை.