God save the King: இங்கிலாந்தின் புதிய மன்னராக வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற்ற கோலாகலமான விழாவில் கிங் சார்லஸ் III அதிகாரப்பூர்வமாக முடிசூட்டிக்கொண்டார்
நவீன யுகத்தின் முடிசூட்டு விழா, 1000 ஆண்டுகளுக்கு முந்தைய அரச மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை பின்பற்றி நடத்தப்பட்டது. கேன்டர்பரி பேராயர் முன்னிலையில், அரசர் மூன்றாம் சார்லஸ் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
மேலும் படிக்க | Coronation: இன்று பிரிட்டன் சரித்திரத்தில் மிக முக்கிய நாள்! 21ம் நூற்றாண்டு முடிசூட்டு விழா
வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க முடிசூட்டு விழாவில், மன்னர் சார்லஸ் III மற்றும் அவரது இரண்டாவது மனைவி கமிலா ஆகியோருக்கு முடி சூட்டப்பட்டது
1000 ஆண்டுகளுக்கு முந்தைய அரச மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை பின்பற்றி நடத்தப்பட்டது
அரியணை ஏறிய பிரிட்டனின் ராஜா மற்றும் ராணி
இளவரசர் ஜார்ஜ் 9, தனது தாத்தா சார்லஸின் முடிசூட்டு விழாவில் பங்கேற்று சரித்திரம் படைத்தார்.
வருங்கால மன்னர் முடிசூட்டு விழாவில் அதிகாரபூர்வ பங்கு வகித்தது இதுவே முதல் முறை, இளவரசர் வில்லியம் புதிய மன்னருக்கு முத்தமிட்டு அவரை வாழ்த்துகிறார்
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தனது மாமானாரின் சார்லஸின் முடிசூட்டு விழாவில்...
இளவரசர் லூயிஸ் மற்றும் அரச வாரிசுகள்
பிரிட்டனின் எதிர்கால ராஜாவும் ராணியும் தங்களது குடும்பத்துடன்
உறுதிப் பிரமாணம் என்றும் அரசர் மூன்றாம் சார்லஸ்
பல்வேறு ஊகங்களுக்கு மத்தியில், இளவரசர் ஹாரி தனது தந்தை மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டார். ஆனால் எதிர்பார்த்தது போலவே அவரது தோற்றம் அரசக் குடும்பத்தினரைப் போல இல்லை. சசெக்ஸ் டியூக், அவரது மனைவி மேகன் மார்க்லே மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட் இல்லாமல் தனியாக வந்து இந்த வரலாற்று நிகழ்வில் கலந்து கொண்டார்.
முடியாட்சி நவீன காலத்தில் எதற்கு என்ற விமர்சனங்களும் எழுந்தன
மகுடம் சூடிய பிறகு மன்னர் ஊர்வலம்