க்ளென் மேக்ஸ்வெல் 6 போட்டிகளில் 3 டக் அவுட் ஆனா பிறகு ஐபிஎல்லில் இருந்து சிறிது போட்டிகள் ஓய்வெடுக்க போவதாக அறிவித்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முக்கிய வீரரான கிளென் மேக்ஸ்வெல் மன மற்றும் உடல் சோர்வு காரணமாக ஐபிஎல் 2024ல் இருந்து ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளார்.
திங்கள்கிழமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தோல்விக்கு பிறகு பேசிய மேக்ஸ்வெல் இந்த முடிவை தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டியில் மேக்ஸ்வெல் விளையாடவில்லை.
"என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில், இது மிகவும் எளிதான முடிவு. கடைசி ஆட்டத்திற்குப் பிறகு நான் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் மற்றும் பயிற்சியாளர்களிடம் இது குறித்து பேசினேன். ஓய்வு எடுக்க இது எனக்கு சிறந்த நேரம்" என்று மேக்ஸ்வெல் கூறினார்.
க்ளென் மேக்ஸ்வெல் இந்த சீசனில் சிஎஸ்கேக்கு எதிராக டக் அவுட், பிபிகேஎஸ் அணிக்கு எதிராக 5 பந்துகளில் 3 ரன்கள், கொல்கத்தா அணிக்கு எதிராக 19 பந்துகளில் 28 ரன்கள், லக்னோக்கு எதிராக 2 பந்துகளில் மீண்டும் டக், ராஜஸ்தான் அணிக்கு எதிராக 3 பந்துகளில் 1 ரன், மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக டக் அவுட் ஆனார்.
இந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியில் கடைசி இடத்தில் உள்ளது.