SRH vs RCB Memes: RCB-ஐ அடித்து துவைத்த SRH-இணையத்தில் கதறும் ரசிகர்கள்! வைரல் மீம்ஸ்..

SRH vs RCB Match Memes Tamil : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஐதராபாத் அணி. 

SRH vs RCB Match Memes Tamil : ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததில் இருந்து சமூக வலைதளத்தை திறந்தாலே, அது குறித்த மீம்ஸாகத்தான் கொட்டி கிடக்கிறது. குறிப்பாக ஒரு சில பரபரப்பான ஆட்டங்களுக்கு பிறகு, நெட்டிசன்கள் இணையத்தில் செய்யும் சேட்டைகள் இருக்கிறதே, அப்பப்பா! ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி அணி, பவுலிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய ஐதராபாத் அணியினர் 4, 6 என வான வேடிக்கை காட்டி, 20 ஓவர் முடிவில் 287 ரன்கள் குவித்து இமாலய இலக்கை பெங்களூருவிற்கு நிர்ணயித்தனர். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியினருக்கு சிறப்பான தொடக்கம் அமைந்தாலும், மிடில் ஓவர்ஸ்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் பரிபோனது. இருந்தும் விடாமல் போராடிய ஆர்சிபி, 20 ஓவர் முடிவில் 262 ரன்களை குவித்தது. இதனால், ஐதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து ஆர்சிபி அணியை கலாய்த்து நெட்டிசன்கள் பலர் இணையத்தில் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். 

1 /8

287 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்த ஐதராபாத் அணி ரசிகர்கள் பேசும் பேச்சை பார்த்தீங்களா?

2 /8

ரெண்டு டீம் அடிக்க வேண்டிய ரன்களை ஒரே டீமா அடிச்சிட்டீங்களே!

3 /8

சிராஜ் இருந்திருந்தா நேற்று மேட்சில் ஆர்.சி.பி ஜெயிச்சிருக்குமோ?

4 /8

ஆர்.சி.பிக்குன்னு இருந்த ரெக்கார்டையும் உடைச்சுட்டீங்களே! நல்லா இருப்பீங்களா?

5 /8

அவ்ளோதான்! கொன்னு பொதச்சாச்சு...

6 /8

அவ்ளோதான் கோச், இந்த ஐபிஎல் கப்பும் ஆர்சிபிக்கு இல்லை..

7 /8

சிங்கம் போல சிங்கிளாக நின்று நேற்றைய ஆட்டத்தில் ரன்களை குவித்த தினேஷ் கார்த்திக்!

8 /8

ரசிகர்களுக்கு மன உளைச்சல் கொடுத்தால், இப்படித்தான் மீம் போடுவார்கள்..