குறைந்த பட்ஜெட்டில் நேபாளத்தை சுற்றி பார்க்க வாய்ப்பு வழங்கும் IRCTC

IRCTC Tour: பயணத்தை விரும்புபவர்களுக்கு, ஐஆர்சிடிசி அடிக்கடி நாட்டிலும் வெளிநாட்டிலும் டூர் பேக்கேஜ்களை கொண்டு வருகிறது. அதன்படி இன்று நாம் நேபாள சுற்றுப்பயணத்தைப் பற்றி காண உள்ளோம்.

Nepal Tour Package: நீங்கள் நவம்பர் மாதத்தில் எங்காவது பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், IRCTC ஒரு அற்புதமான நேபாள டூர் பேக்கேஜுடன் வந்துள்ளது. சண்டிகரில் இருந்து இந்தப் பயணம் தொடங்கும்.

 

1 /5

நேபாள டூர் பேக்கேஜ்: இந்தியாவின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள நேபாளம், அதன் அழகுக்காக உலகம் முழுவதும் அறியப்படுகிறது. இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் கோடிக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நேபாளத்துக்குச் செல்கின்றனர்.

2 /5

விமானப் பயண பேக்கேஜ்: இந்த பேக்கேஜ் மூலம் நீங்கள் காத்மாண்டு மற்றும் பொக்காராவிற்குச் செல்லும் வாய்ப்பைப் பெறுகிறீர்கள். இது சண்டிகரில் இருந்து காத்மாண்டுவிற்குச் செல்ல மற்றும் வருவதற்கான டிக்கெட்டுகளைப் பெறுவதற்கான ஒரு விமானப் பயண பேக்கேஜாகும்.

3 /5

6 பகல் மற்றும் 5 இரவுகள்: இந்த பேக்கேஜ்' நவம்பர் 4, 2023 தொடங்கும். இந்த பேக்கேஜ் மொத்தம் 6 பகல் மற்றும் 5 இரவுகள் அடங்கும். இதில் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு ஆகிய மூன்றும் கிடைக்கும்.

4 /5

3 ஸ்டார் ஹோட்டல் வசதி : இந்த பேக்கேஜில் 3 ஸ்டார் ஹோட்டலில் தங்குவதற்கான வசதி கிடைக்கும். இதில், நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பும் கிடைக்கும்.

5 /5

கட்டண விவரம்: இந்த பேக்கேஜில் முன்பதிவு செய்ய வேண்டுமானால் தனியாக பயணம் செய்ய ரூ.50,500, இரண்டு பேருக்கு ரூ.42,500, மூன்று பேருக்கு ரூ.42,100 செலுத்த வேண்டும்.