கஜகேசரி யோகத்தால் வாழ்க்கையில் உச்சபட்ச மகிழ்ச்சியை அனுபவிக்கும் 3 ராசிகள்

Gajakesari Rajyoga: இன்று அரிய கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது, இந்த யோகத்தால் மூன்று ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், வாழ்க்கையில் உச்சபட்ச மகிழ்ச்சியை அனுபவிக்கவிருக்கும் 3 ராசிகள்...

அனைத்து நவகிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இன்று, அக்டோபர் 28ஆம் தேதி கிரகங்களின் மாற்றத்தால் அபூர்வ கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. 

1 /8

கிரகப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தருகிறது என்றால், சில ராசிகளுக்கு புயலை ஏற்படுத்துகிறது. இம்முறை அக்டோபர் 28ஆம் தேதி ஏற்படும் அபூர்வ கஜகேசரி ராஜயோகத்தின் தாக்கம் இன்று முதல் தொடங்கும்.

2 /8

சந்திரன் மேஷ ராசியில் நுழைவதால் ஏற்படும் ராஜயோகத்தின் பலன்கள் யாருக்கு என்ன செய்யும்?  

3 /8

பண்டிகைகளின் மாதமான ஐப்பசி மாதத்தில் உருவாகும் கஜகேசரி யோகம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அது எந்த ராசிக்காரர்களுக்கு பலன் அளிக்கும்? தெரிந்துக் கொள்வோம்

4 /8

அக்டோபர் 28ஆம் தேதியான இனிறு உருவாகும் கஜகேசரி ராஜயோகம் கடக ராசிக்காரர்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சியையும், வியாபாரத் துறையில் லாபத்தையும் கொண்டு வந்து சேர்க்கும். வேலை செய்பவர்களுக்கு பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும், பதவி உயர்வு பெறலாம். வேலையை மாற்ற நினைக்கும் கடக ராசிக்காரர்களுக்கு இது மிகவும் நல்ல நேரமாக இருக்கும்

5 /8

அபூர்வ கஜகேசரி ராஜயோகம் மிதுன ராசிக்காரர்களின் வாழ்வில் மாற்றங்களைக் கொண்டுவரும். இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலை வலுவாக இருக்கும், பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணம் சம்பாதிக்க புதிய வழிகள் கிடைக்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மிதுன ராசிக்காரர்களின் ஆரோக்கியமும் மேம்படும்.

6 /8

மேஷ ராசிக்காரர்களும் கஜகேசரி ராஜயோகத்தின் சுப பலன்களால் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் முன்னேற்றத்தையும் அடைவார்கள்  திருமண வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும், செல்வம் வந்து சேரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் இந்த நேரத்தில் முடியும். தன்னம்பிக்கை கூடும், குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும்.

7 /8

கடகம், மிதுனம் மற்றும் மேஷம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கும் இன்று உருவாகும் கஜகேசரி ராஜயோகம் கடவுளின் ஆசியைப் பெற்றுத்தரும்

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை