Rohit Sharma : ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் செய்யும் தவறுகளால் சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் உள்ளிட்ட 4 கிரிக்கெட் வீரர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது.
Rohit Sharma : துலீப் டிராபி தொடருக்கு நான்கு அணிகளில் 61 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு விளையாட உள்ளனர். ஆனால் 4 நட்சத்திர வீரர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே அடுத்த மாதம் தொடங்கும் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, துலீப் டிராபிக்கான அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் நான்கு அணிகள் களமிறங்குகின்றன.
ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இந்த தொடரில் விளையாடவில்லை. இவர்களைத் தவிர ரவிச்சந்திரன் அஸ்வினும் தேர்வு செய்யப்படவில்லை.
கில் தலைமையிலான ஏ அணியில் ரியான் பராக், கேஎல் ராகுல், சிவம் துபே மற்றும் குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் உள்ளனர். ஈஸ்வரன் கேப்டனாக இருக்கும் பி அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆல்-ரவுண்டர் நிதிஷ் ரெட்டியும் இதில் உள்ளார்.
கெய்க்வாட் தலைமையிலான சி அணியில் சூர்யகுமார் யாதவ், சாய் சுதர்ஷன், ரஜத் படிதார் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷான் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக இருக்கும் டி அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேவ்தத் படிக்கல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இதனால் மொத்தம் நான்கு அணிகளில் 61 வீரர்கள் விளையாடுகின்றனர். ஆனால் 4 நட்சத்திர வீரர்கள் சேர்க்கப்படவில்லை. இதனால், டெஸ்ட் அணிக்கு இவர்கள் நான்கு பேரும் பரிசீலிக்கப்படமாட்டார்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
அந்த பிளேயர்கள் யார் என்றால் ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், ப்ரித்திவி ஷா, யுஸ்வேந்திர சாஹல். இவர்கள் யாரும் துலீப் கோப்பைக்கான தொடரில் விளையாடவில்லை.
ஆனால், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் நான்கு பேரும் சிறப்பான ரெக்கார்டுகளைக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இந்த தொடரிலாவது விளையாட வாய்ப்பு கொடுத்திருக்கலாம். ஆனால், வேண்டுமென்றே அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் தவிர்க்கிறார் கேப்டன் ரோகித் மற்றும் கவுதம் கம்பீர். இது புது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.