சர்வதேச அளவில் கால்பந்து விளையாட்டு மிகவும் பிரபலமானது. கால்பந்துக்கு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். தங்களுக்கு விருப்பமான அணி அல்லது வீரர்களின் வெற்றி மற்றும் தோல்விக்காக ரசிகர்கள் செய்யும் சேட்டைகள் சில நேரங்களில் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், பல நேரங்களில் சிக்கலை ஏற்படுத்துகிறது.
கால்பந்து மைதானத்தில் இருக்கும் கோல்கீப்பர் மீது லேசர் ஃப்ளாஷ் லை அடிப்பது முதல் பிஎஸ் 4 கன்ட்ரோலர்களை வீசுவது என பல சந்தர்ப்பங்களில் ரசிகர்கள் கால்பந்து போட்டிகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளனர். அவற்றில் சில சந்தர்ப்பங்கள் புகைப்படங்களாக…
Also Read | Criketers sex scandle: பாலியல் வழக்குகளில் சிக்கிய பிரபல கிரிக்கெட்டர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR
இங்கிலாந்து vs டென்மார்க் - ஜூலை 8, 2021: யூரோ 2020 இல் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் டென்மார்க் கோல்கீப்பர் காஸ்பர் ஷ்மிச்சலின் முகத்தில் லேசர் பேனாவின் மூலம் வெளிச்சத்தை பாய்ச்சினார் ஒரு ரசிகர். இது காஸ்பருக்கு இடைஞ்சலாக இருந்தாலும், அவர் சமாளித்துக் கொண்டார். இறுதியில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் போட்டியில் வென்றது. 1966 உலகக் கோப்பைக்குப் பிறகு முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றாலும், ரசிகர்களின் குறும்பால் தற்போது விசாரணையை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி…
குரோஷியா vs செக் குடியரசு - ஜூன் 18, 2016: யூரோ 2016 இல் குரோஷியா Vs செக் குடியரசு மோதலின் போது, முன்னாள் நாட்டின் ரசிகர்கள் ஆடுகளத்தில் தீ பற்றி எரியும் பொருட்களை வீசினார்கள். அப்போது குரோஷியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. அப்போது குரோஷியா ஆதரவாளர்களும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர். குரோஷிய ரசிகர்கள் தங்கள் கால்பந்து சம்மேளனத்தின் மீதான நம்பிக்கையை இழந்ததே இந்த மோதலுக்கு காரணம். குரோஷிய கால்பந்து சம்மேளனம் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
யங் பாய்ஸ் vs பாஸல் - செப்டம்பர் 24, 2018: ரசிகர்கள் ஆடுகளத்தில் பல்வேறு பொருட்களை வீசியுள்ளனர். ஆனால், , சுவிட்சர்லாந்தில் யங் பாய்ஸ் மற்றும் பாசலுக்கு இடையிலான போட்டியின்போது ரசிகர்கள் பிஎஸ் 4 கன்ட்ரோலர்கள் மற்றும் டென்னிஸ் பந்துகளை ஆடுகளத்தில் வீசினர். இதன் விளைவாக போட்டி இரண்டு நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டது. யங் பாய்ஸ் மற்றும் பாசல் இடையிலான போட்டியில் யங் பாய்ஸ் 7-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
AEK ஏதென்ஸ் vs அஜாக்ஸ் - நவம்பர் 27, 2018: ஏதென்ஸில் நடைபெற்ற ஏ.இ.கே ஏதென்ஸுக்கும் அஜாக்ஸுக்கும் இடையிலான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மோசமான வன்முறை சம்பவங்கள் நடந்தேறின. சில ரசிகர்களுக்கு படுகாயம் ஏற்படுத்தி, ரத்தக்களரியை உருவாக்கினார்கள் ரசிகர்கள். ஒரு சந்தர்ப்பத்தில் பெட்ரோல் குண்டு வெடிக்கப்பட்டதால் நிலைமை மோசமானது. வன்முறையை அடக்க கலகப் பிரிவு போலீசார் அழைக்கப்பட்டனர். இந்த மறக்க முடியாத போட்டியில் அஜாக்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
பிரைட்டன் Vs வெஸ்ட் ஹாம் - அக்டோபர் 6, 2018: பிரைட்டனுக்கும் வெஸ்ட் ஹாமுக்கும் இடையிலான பிரீமியர் லீக் போட்டியின் போது நடுவர் கெவின் பிரண்ட் களத்தில் இறங்கியபோது, அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை எதிர்கொள்வோம் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். போட்டியின் போது கூட்டத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட செக்ஸ் பொம்மை ஒன்று அவர் மீது தூக்கி வீசப்பட்டது. அதைப் பார்த்த அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. முகம் சிவந்து போனது. அதற்குள் மற்றொருவர் அந்த செக்ஸ் பொம்மையை ஆடுகளத்திலிருந்து அகற்றியதால் நிலைமை சீரானது. அமென் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் பிரைட்டன் 1-0 என்ற கணக்கில் வென்றது.