வைரஸ் வில்லனாகி விறுவிறுப்பைக் கூட்டிய இந்தியத் திரைப்படங்கள்!!

கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும்  இவ்வேளையில் வைரசை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட சில இந்தியப் படங்களைப் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும்  இவ்வேளையில் வைரசை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட சில இந்தியப் படங்களைப் பார்க்கலாம்.

1 /5

கொரோனா காலத்தில்தான் இப்படத்தைப் பலர் பார்த்தர்கள். இன்றைய நிலையை முன் கூட்டியே கணித்துச் சொன்னது போல் இருக்கிறது படம். சில மாறுபாடுகள் இருந்தாலும், படத்திலும் ஒரு வைரஸ் காரணமாக ஓரு ஊரின் மக்களுடைய இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படுகிறது. சுவாரசியமான வித்தியாசமான திரைக்கதை!!

2 /5

இந்தியா மீது உயிரியல் போர் நடத்த சீனா அனுப்பும் ஒரு உளவாளியை போதிதர்மனின் வம்சத்தில் வந்த நாயகன் வெற்றி காணும் கதை.

3 /5

ஒரு ஆய்வகத்திலிருந்து காணாமல் போகும் வைரசை பின் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து இந்தியா வரும் நாயகன் இறுதியில் அந்த கொடிய வைரசை எவ்வாறு கண்டு பிடித்து அழிக்கிறார் என்பதுதான் கதை.

4 /5

அடையாளம் தெரியாத வைரசால் பாதிக்கப்படும் ஒரு நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 2 மணி நேரங்களில் இறக்கிறார். மெதுவாக பலருக்கு அவரிடமிருந்து தொற்று பரவி இருப்பது தெரிய வருகிறது. அதன் பின்னர் தொடரும் வைரஸ் வேட்டை படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு சென்றுள்ளது.  

5 /5

ஒரு இராசயன நிறுவனத்தின் லாரியிலிருந்து கசியும் திரவியத்தை நக்கும் நாய் ஒரு மனித்னைக் கடிக்க, அந்த மனிதனுக்கு தொற்று பரவுகிறது. பின்னர் காட்டுத் தீ போல் பரவும் அந்த கொடிய தொற்று எவ்வாறு நிறுத்தப்படுகிறது என்பதுதான் கதை.