2024 Pongal Jallikattu: ஜனவரி மாதம் பிறந்தவிட்டது, தை பிறக்க இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், பொங்கல் விழாவை கொண்டாட தமிழ்நாட்டு மக்கள் தயாராகி வருகின்றனர்.
டிசம்பர் மாதம் மழை வெள்ளதால் பாதிக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் விழா சில நாட்களில் களைகட்டிவிடும்.
வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு பிரதானமான ஒன்று. ‘ஏறு தழுவல்’ எனப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உலக அளவில் மதிப்பும் மரியாதையும் உண்டு
ஜனவரி மாதம் பொங்கல் விழாவை கொண்டாட உள்ள நிலையில், தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் புகழ்பெற்றவை.
ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வோரு ஆண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் முதலில் தொடங்கும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தச்சங்குறிச்சி விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், 2024 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தச்சங்குறிச்சி விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு விழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளும், மாடு பிடிவீரர்களும் போட்டிக்காக தயாராகி வருகின்றனர்.
மதுரையில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு மைதானம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.