FIFA Qatar: கால்பந்துப் போட்டியில் கத்தாரின் கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகளை துறந்த மாடல்!

FIFA World Cup: ஃபிஃபா உலகக் கோப்பையை நடத்தும் கத்தார், பார்வையாளர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மதுவிலக்கு, பெண்கள் இறுக்கமான ஆடைகளை அணிவது என பல விஷயங்களுக்கு தடா சொன்ன கத்தார், முழங்காலுக்கு மேல் உள்ள ஆடைகளை அணியக்கூடாது என விதிகளை வகுத்திருந்தது.

 

கால்பந்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் கத்தார் கால்பந்து திருவிழாவில் பிரபல மாடல் அழகி ஒருவர் கால்பந்தாட்ட விதிகளை மீறிய சம்பவம் நடந்துள்ளது. விதிமீறல் செய்த மாடல் அழகி முன்னாள் மிஸ் குரோஷியா இவானா நோல். இதற்காக அவருக்கு கத்தார் என்ன தண்டனை விதிக்கப் போகிறது என்று அனைவரும் அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் படிக்க | FIFA World Cup : செக்ஸ் குற்றச்சாட்டுகள்... கால்பந்து உலகையே உலுக்கிய 5 சம்பவங்கள்

 

 

1 /5

ஃபிஃபா உலகக் கோப்பையின் தொடக்கத்திலேயே, பெண்கள் இறுக்கமான ஆடைகளை அணிந்து வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது

2 /5

முன்னாள் மிஸ் குரோஷியா மற்றும் பிரபல மாடல் இவானா நோல் பல கத்தார் சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டார்.  

3 /5

மொராக்கோவிற்கு எதிரான குரோஷியாவின் முதல் போட்டியைக் காண வந்த இவானா நோல் அல்-பைட் மைதானத்திற்குச் சென்றார். அவர் சிவப்பு மற்றும் வெள்ளை வடிவ ஆடையை அணிந்திருந்தார். கத்தார் சட்டத்தின்படி, இவானா நோல் அணிந்திருந்த ஆடை பொருத்தமானதாக இல்லை. 

4 /5

தொடர்ந்து இரண்டு போட்டிகளைக் காண வந்ததாகவும், இரண்டு போட்டிகளிலும் அவர் ஆபாசம் என்று கத்தார் தடை செய்திருக்கும் உடைகளை அணிந்திருந்ததாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது விதிகளுக்கு எதிரானது என்றும், அவர் தண்டிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் கத்தார் அரசின் பரிசீலனையில் உள்லது

5 /5

கால்பந்தாட்ட மைதானத்தில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இவானா நோல் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்