சோம்பேறிகள் திருவிழா! சும்மா இருந்தால் ரூ. 90,000 பரிசு! எங்கு தெரியுமா?

அலாரங்கள் எழுப்பினாலும் தூங்குவதை விரும்புபவாராக நீங்கள் இருந்தால் உங்களுக்காக ஒரு திருவிழா உள்ளது.  இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் உங்களுக்கு 90,000 ரொக்க பரிசு உண்டு.  

 

1 /5

சோம்பேறி திருவிழா என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு கிழக்கு ஐரோப்பாவின் மாண்டினீக்ரோவில் உள்ள ப்ரெஸ்னா கிராமத்தில் நடைபெறுகிறது. இதில் போட்டி நடக்கும் நாட்களில் போட்டியாளர்கள் உட்காரவோ நிற்கவோ அனுமதி மறுக்கப்படுகின்றது.  

2 /5

அதே சமயம் இந்த தூக்க போட்டியில் சில விதிமுறைகள் உள்ளது. அதன் படி போட்டியாளர்கள் புத்தகங்களைப் படிக்கவும், தங்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் அனைவரும் படுக்கையில் இருந்த படியே இருக்க வேண்டும்.   

3 /5

ஒவ்வொரு எட்டு மணி நேரத்திற்கும் 15 நிமிட இடைவெளி மட்டுமே அவர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது, மேலும் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதிப்படுத்த அவர்களின் உடல்நிலையும் நெருக்கமாக கண்காணிக்கப்படுகிறது.  

4 /5

சோம்பேறி ஒலிம்பிக் என்று அழைக்கப்படும் இந்த போட்டியில் மாண்டினீக்ரோ கிராமத்தைச் சேர்ந்த பெரும்பான்மையானவர்கள், ரஷ்யா மற்றும் செர்பியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.  

5 /5

இந்த போட்டியில் பங்கேற்கும் தூக்க வீரர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கப்படுகின்றது, இந்த போட்டி நல்ல ரிசார்ட்டு போன்ற அமைப்பில் நடத்தப்படும் போட்டியில் அறைகள் நன்றாக வரையப்பட்டவையாக காற்றோட்டமாக இருக்கும், நல்ல நறுமணத்துடன் கூடிய போர்வைகள் இருக்கும். கடந்த ஆகஸ்டு மாதம் 21 அன்று தொடங்கிய இந்த போட்டி பெரும் வரவேற்பை பெற்றது.