ஸ்ட்ராபெர்ரி ஆரோக்கியத்துக்கு மட்டுமில்ல, பிசினசுக்கும் நல்லது! மானியம் கிடைக்கும்

Subsidy News: விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பாரம்பரிய விவசாயத்திற்கு மட்டுமல்ல,  தோட்டக்கலை பயிர்களிலும் கவனம் செலுத்தி வருகின்றன.

தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு, மத்திய மாநில அரசுகள் மானியம் வழங்குகின்றன

1 /7

தோட்டக்கலை பயிர்களை விவசாயிகளுக்கு ஊக்குவிக்க பீகார் அரசு ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. 

2 /7

அரசு நடத்தும் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு பணி திட்டத்தின் கீழ், ஸ்ட்ராபெர்ரி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும்.

3 /7

அரசின் இந்த முயற்சியால், மாநிலத்தில் தோட்டக்கலை பயிர்களை பயிரிட விவசாயிகள் புதிய வாய்ப்பைப் பெறுவார்கள்.  

4 /7

சந்தையில் அதிகரித்து வரும் ஸ்ட்ராபெரியின் தேவையை பூர்த்தி செய்யும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது

5 /7

பீகார் அரசு தோட்டக்கலை இயக்ககம், வேளாண்மைத் துறையின் செய்தியின் படி, ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஸ்ட்ராபெர்ரி சாகுபடிக்கு ஒரு யூனிட் விலைக்கு 40% மானியம் வழங்கப்படும்

6 /7

ரூ.50,000 மானியம் ஒரு யூனிட் ஸ்ட்ராபெரி சாகுபடிவிலை ஹெக்டேருக்கு ₹ 1.25 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகளுக்கு 40% மானியம் கிடைக்கும். அரசிடம் இருந்து ரூ.50,000 மானியம் கிடைக்கும் என்பதால், விவசாயிகளுக்கு 75,000 ரூபாய் மட்டுமே செலவாகும்

7 /7

பீகார் மாநில விவசாயிகள், தோட்டக்கலை பயிர்களை பயிரிட விரும்பினால், இத்திட்டத்தில் பயன்பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.