COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட பிரபலத் தலைவர்கள் In pics

1 /6

அண்மையில் கொரோனா தொற்று பாதித்த அமெரிக்க அதிபர் Walter Reed National Military Medical Center மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். திங்கட்கிழமையன்று அங்கிருந்து அவர் வெள்ளை மாளிகைக்கு வந்துவிட்டார்.  

2 /6

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி தெரியவந்தது. அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் ஏப்ரல் ஒன்பதாம் தேதிக்கு பிறகு, மருத்துவமனையில் அறைக்கு மாற்றப்பட்டார். இப்போது அவர் கொரோனாவில் இருந்து குணமாகி ஆரோக்கியமாக உள்ளார்.   

3 /6

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி Sophie Gregoire Trudeauவுக்கு கொரோன தொற்று இருப்பது மார்ச் மாதம் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, பிரதமரும் தானாகவே முன் வந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். தற்போது தம்பதிகள் கொரோனாவை டைவர்ஸ் செய்துவிட்டார்கள்.  

4 /6

பொலீவியாவின் இடைக்கால அதிபர் Jeanine Anezவுக்கு கொரோனா தொற்று இருப்பது ஜூலை மாதம் 9ஆம் தேதியன்று உறுதிப்படுத்தப்பட்டது. தான் நன்றாக இருப்பதாகவும், தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையிலும், வேலை பார்ப்பதாக தனது டிவிட்டர் செய்தியில் தெரிவித்தார்.   

5 /6

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, ராணுவத்தின் முன்னாள் கேப்டன். ஜூலை மாதம் ஏழாம் தேதியன்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அவர் சிகிச்சையில் குணமடைந்துவிட்டார்.

6 /6

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதியன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு அவர் பூரண நலமடைந்துவிட்டார்.