Ezharai Nattu Sani: திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஜனவரி 17 ஆம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் பெயர்ச்சியானார். இதனுடன் சில ராசிகளுக்கு எழரை சனியின் தாக்கம் தொடங்கியது. சிலர் இதிலிருங்க்து விடுபட்டார்கள். ஏழரை சனியால் இக்கட்டான சூழலை சந்திக்கவுள்ள ராசிகளையும், பரிகாரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் கும்ப ராசியில் நுழைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மகர ராசியை விட்டு விலகி கும்ப ராசிக்குள் பிரவேசித்தது ஒரு பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கபடுகின்றது.
சனி கும்ப ராசியில் நுழைந்தவுடன் கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் மீது சனி தசை தொடங்கும். கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கடினமான கட்டம் தொடங்கும் என்று கூறலாம். இவர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். பண இழப்பு ஏற்படலாம்.
சனி கும்ப ராசிக்கு வந்தவுடனேயே மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் முதல் கட்டம் ஆரம்பமானது. அதாவது இந்த வருடம் சனியால் மீன ராசிக்காரர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
மீன ராசிக்காரர்களுக்கு கடின உழைப்பின் முழு பலனும் கிடைக்காமல் போகலாம். வாழ்க்கையில் போராட்டங்களை சந்திக்க வேண்டி வரக்கூடும். பண இழப்பு, உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
இதுதவிர மகரம், கும்ப ராசிக்காரர்களுக்கும் ஏழரை நாட்டு சனியின் பாதிப்பு ஏற்படும். இருப்பினும், மகர ராசியில் ஏழரை நாட்டு சனியின் கடைசி கட்டம் தொடங்கும் என்பதால், அவர்களின் துன்பங்கள் கணிசமாகக் குறையும். விலகும் வேளையில் சனி அவர்களுக்கு சுப பலன்களைத் தருவார்.
ஏழரை நாட்டு சனியால் வரும் துன்பங்களில் இருந்து விடுபட சில பரிகாரங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சனிக்கிழமைகளில் சனி பகவானின் கோவிலுக்கு சென்று அவரை பிரார்த்திக்கலாம். அரச மரத்தின் கீழ் தீபம் ஏற்றி வழிபடலாம். அனுமனின் பக்தர்களை சனி பகவான் சோதிப்பது இல்லை. ஆகையால், அனுமான் சாலிசா சொல்வதும் நல்ல பலன்களை அளிக்கும். சனி சாலிசா, சனி ஸ்தோத்திரங்கள், கோளறு பதிகம் ஆகியவற்றை பாராயணம் செய்யலாம். ஏழை எளியவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் உதவி செய்வது சனி பகவானை மகிழச்செய்யும்.