தனித் தனியா பணம் செலவழிக்க வேண்டாம்... Wifi, OTT, DTH எல்லாம் ஒரே ரீசார்ஜ் பிளானில் - முழு விவரம்!

Airtel Recharge Plans: இன்றைய நவீன யுகத்தில் அனைவருக்கும் தேவையான Wifi + DTH + OTT உள்ளிட்ட பலன்களை ஒரே ரீசார்ஜ் திட்டத்தில் ஏர்டெல் வழங்குகிறது. அதுகுறித்து இதில் காணலாம்.

  • Oct 31, 2023, 16:25 PM IST

 

 

1 /7

இப்போது பலரும் தங்களது வீட்டில் தொலைக்காட்சிக்காக DTH மற்றும் புதிய படங்கள், வெப்சீரிஸ்களை பார்க்க ஓடிடி ஆகியவற்றை சந்தா செலுத்தி பயன்படுத்துகின்றனர். 

2 /7

மேலும், வீட்டில் அனைவரின் இணைய பயன்பாட்டுக்கு Wifi வசதியும் வைத்துக்கொள்கின்றனர். கொரோனா தொற்றுக்கு பின் பலரும் பணிசார்ந்து அதை வைத்துக்கொள்கின்றனர். 

3 /7

அந்த வகையில் DTH, Fiber, லேண்ட்லைன், ஓடிடி போன்ற பலன்களை ஒரே திட்டத்தில் பெற ஏர்டெல் ஒரு ரீசார்ஜ் திட்டத்தை வைத்துள்ளது.

4 /7

இந்த ரீசார்ஜ் திட்டம் 1099 ரூபாய் ஆகும். இதன் மூலம், 200Mbps வேகம் உள்ள பிராட்பேண்ட்டை பெறுவீர்கள். மாதம் 3.3TB டேட்டா கிடைக்கும். இது மாதத்திற்கான திட்டமாகும்.

5 /7

ஏர்டெல் இந்த திட்டத்தில் மூலம் DTH இணைப்பையும் தருகிறது மேலும், இதில் மாதம் ரூ.350 மதிப்பிலான டிவி சேனல்களை இலவசமாக வழங்குகிறது. 

6 /7

இதனை ரீசார்ஜ் செய்வதன் மூலம், அமேசான் பிரைம், டிஸ்னி+ஹாட்ஸ்டார், ஏர்டெல் XStream Play உள்ளிட்ட ஓடிடி சந்தாவை ஒரே மாதத்திற்கு இலவசமாக பெறலாம். 

7 /7

மேலும், ஹார்ட்வேர் சாதனங்களை பொருத்த ரூ.3300 அட்வான்ஸ் வசூலிக்கப்படும். வருங்கால பில்களில் அவை கழிக்கப்படும். இதில் லேண்ட்லைனையும் நீங்கள் பெறலாம். அதில் இலவசமாக நீங்கள் பேசிக்கொள்ளலாம்.