எம்மதமும் சம்மதம்...எடுத்துக்காட்டிய 7 காதல் கதைகள்! கண்டிப்பா பாருங்க..

Eid Al Adha Bakrid Celebrations Tamil Movies : உலகம் முழுவதும் இன்று, பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், மதத்தை தாண்டி மனிதத்தை தொட்ட காதல் கதைகள் சிலவற்றை இங்கு பார்ப்போம். 

Eid Al Adha Bakrid Celebrations Tamil Movies : இஸ்லாமியர்கள் கொண்டாடும் புனித தினமான பக்ரீத், இன்று (ஜூன் 17) கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், மதப்பாகுபாடின்றி பல்வேறு தரப்பினரும் ஒன்று கூடி பக்ரீத் தினத்தினை கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில், மதத்தை தாண்டி வளர்ந்த காதல் கதைகள் பல இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை, இங்கு பார்ப்போம். 

1 /8

தமிழ் திரைப்படங்கள் பல, மதத்தை தாண்டி மனிதத்தை போற்றும் காதல் கதைகளாக உருவாகி இருக்கின்றன. அவை என்னென்ன படங்கள் என்பதை இங்கு பார்ப்போம். 

2 /8

மெல்லத் திறந்தது கதவு: 1986ஆம் ஆண்டு வெளியான படம், மெல்லத் திறந்தது கதவு. மைக் மோகன் ஹீரோவாக நடித்திருப்பார். இந்த படத்தில், அவர் முதலில் காதலிக்கும் பெண், நூர்ஜஹான். அவளின் கண்களை மட்டுமே பார்த்து காதல் செய்து எப்படியேனும் முகத்தை பார்க்க வேண்டும் என்று போராடுவார். ஆனால், எதிர்பாராத விதமாக அவர் காதலிக்கும் நூர்ஜஹான் புதைக்குழியில் விழுந்து உயிரிழப்பார். மதத்தை தாண்டி, பலர் மனதையும் நொறுக்கிய படங்களுள் ஒன்று, மெல்லத் திறந்தது கதவு. இதை ஆஹா ஓடிடி தளத்தில் பார்க்கலாம். 

3 /8

பாம்பே: மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம், பாம்பே. இந்த படம் வெளியான போது பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. காரணம், இதில் வேற்று மதத்தினர் திருமணம் செய்து கொள்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பது. இந்த படத்தை சில உலக நாடுகளும் தங்கள் நாடுகளில் வெளியிடாமல் தடை செய்தன. ஆனாலும், காலத்தை தாண்டிய காவியமாக திகழ்கிறது பாம்பே. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இப்படத்தை பார்க்கலாம். 

4 /8

பொக்கிஷம்: பொக்கிஷமாய் பாதுகாக்க வேண்டிய படங்களுள் ஒன்று, பொக்கிஷம். 2009ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் சேரன் கதாநாயகனாக நடித்திருப்பார். நாதிரா எனும் பெண்ணை காதலிக்கும் இவர் கடிதங்கள் மூலமே தனது காதலை வளர்ப்பார். பல இளசுகளின் மனங்களை நொறுக்கிய காதல் கதைகளுள் இதுவும் ஒன்று. 

5 /8

மீண்டும் ஒரு காதல் கதை: சாதாரண காதல் கதையாக இருந்தாலும், அபாரமான பாடல்களால் வெற்றி பெற்ற படம், மீண்டும் ஒரு காதல் கதை. இதில் ஆயிஷா எனும் பெண்ணை காதலிக்கும் விநோத் அவருக்காக இந்த உலகே எதிர்த்து நிற்கும் போது அவர்களை எதிர்த்து போராடுவார். இதுவும், மதங்களை கடந்து காதலை போற்றிய படம்தான். 

6 /8

திருமணம் எனும் நிக்காஹ்: ஒரே மதத்தை சேர்ந்த இருவர், தங்களின் மதங்களை மாற்றி கூறி பின்பு காதலில் விழும் படம்தான் திருமணம் எனும் நிக்காஹ். இதில் ஜெய் மற்றும் நஸ்ரியா நாயகன்-நாயகியாக நடித்திருப்பர். 

7 /8

காலா: கைசேரா காதல் கதைகளுள் ஒன்று, காலா. இந்த படத்தில் காலா முதலில் காதலிக்கும் பெண்ணாக வருவார், ஜரீனா. திருமணம் கைகூடும் நேர்த்தில் இருவரும் பிரியும் நிலை வந்து விடும். பல வருடங்கள் கழித்து இருவரும் சந்தித்துக்கொள்ளும் இடம், அவ்வளவு அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இப்படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டாரில் காணலாம். 

8 /8

தங்கம்: நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்த படம், பாவக்கதைகள். ஆந்தாலஜி படமான இதில், முதல் கதையாக வருவது ‘தங்கம்’. இதனை, சுதா கொங்கரா இயக்கி இருந்தார். இந்த படத்தில் மாற்று மதங்களை சேர்ந்தவர்கள் காதலிப்பது போன்று கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.