Astro: புத ஆதித்ய யோகத்தினால் ‘இந்த’ ராசிகளுக்கு சுக்கிர திசை தான்!

சூரியன் மற்றும் புதன் பெயர்ச்சி: வெற்றி, ஆரோக்கியம், தன்னம்பிக்கை ஆகியவற்றுக்கு காரணமான சூரியனும் , புத்திசாலித்தனம், செல்வச்செழிப்பு ஆகியவற்றிற்கு காரணமான புதனும் விரைவில் கூட்டணி அமைக்க உள்ளனர். இவ்விரு கிரகங்களும் நவம்பர் 16 அன்று விருச்சிக ராசியில் இணைவதால் புத -ஆதித்ய யோகம் உருவாகிறது. சூரியன் மற்றும் புதன் இணைவது புதாதித்ய யோகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சில ராசிக்காரர்களுக்கு செல்வ செழிப்பை கொண்டு வரும். இந்த யோகம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

1 /4

மகரம் விருச்சிக ராசியில் சூரியனும் புதனும் இணைவதால், மகர ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் வியாபாரத்தில் பெருகி லாபம் அடைவார்கள். வேலையிலும் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். அதே சமயம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைத்தால் இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

2 /4

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த கிரக இணைவு பல சுப பலன்களைத் தரும். இந்த நேரத்தில், தொழில் துறைகளில் இருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். பணியில் இருப்பவர்கள் மேலதிகாரியின் பாராட்டை பெறுவார்கள். இத்துடன் பண ஆதாயமும் கூடும். வணிக விரிவாக்கத்திற்கு இந்த நேரம் மிகவும் சாதகமானது.

3 /4

கன்னி ராசிக்காரர்களுக்கு புத ஆதித்ய யோகம் மூலம் சிறப்பான பலன்களும் கிடைக்கும். இந்த ராசிக்கு 7வது வீட்டில் சூரியனும் புதனும் இணைகின்றனர். இது இவர்களுக்கு அதிகாரம் அளிக்கும். உங்கள் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். குடும்பத்துடன் சிறந்த வகையில் நேரத்தை செலவிடலாம். அதுமட்டுமின்றி இந்த நேரத்தில் சகோதர ஒத்துழைப்பும் இருக்கும்.

4 /4

சிம்ம ராசிக்காரர்களின் ஜாதகத்தில் 5-ம் வீட்டில் இந்த கிரக இணைவு அமைவதால் அவர்களுக்கு மிகுந்த பலன்கள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு புத்தாதித்ய ராஜயோகம் மிகவும் சாதகமாக அமையும். வாகனம், சொத்து வாங்க யோகம் கூடும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)